Thursday, December 24, 2009

அப்பா சைக்கிள்அய்யனார் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில்  மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதை கவனித்துக் கொண்டே வந்தான்.அதில் ஒரு குழந்தைக்கு அதன் அப்பா மிகுந்த ஆர்வத்துடன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.அய்யனார் வீட்டிலும் ஒரு சைக்கிள் இருந்தது.ஆனால் எப்போதுலிருந்து அது தன் வீட்டில் இருக்கிறது என்பது அவனுக்கு நினைவில்லை.அவனுக்கு நினைவு தெரிந்த காலம் முதலே அது அவர்கள் வீட்டில் இருந்தது. அவன் சிறுவயதில் யாறேனும்  ' உங்க வீட்டில யாரு எல்லா  இருக்கிங்க ? என்று கேட்டால் அவன் பதில் 'அம்மா,அப்பா,அண்ணன்,அக்கா,சைக்கிள்  ' என்பதாகத்தான் இருக்கும்.சைக்கிளையும் ஒரு குடும்ப உருப்பினராகவே கருதிவந்தான்.

பள்ளி செல்லாத வயதில் எப்போதும் சைக்கிளுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சைக்கிளின் சக்கரத்தை வேகமாக சுற்றி டைனமோவை இயக்கிவிட்டு விளக்கு எரிவதை பார்ப்பதே அந்நாளில் அவனுக்கு பிடித்த விளையாட்டு. அந்த சைக்கிள் நல்ல உயரம். நல்ல கம்பீரம். கரும் பச்சைநிற வர்ணம் தீட்டப்பட்ட‌ சைக்கிள். அதன் கைப்பிடிகள் வலுவானவை. கைப்பிடியின் உறை கருப்பானது. கைப்பிடிக்கு சற்று மேலே அழகான பெல். பெல் பார்ப்பதற்கு பள பளப்புடன் இருக்கும். அது எழுப்பும் ஒலி இனிமையானது.

முன் கம்பியிலும்,சீட்டிலும் அழகாக தைக்கப்பட்டு அணிவிக்கப்பட்ட கவர். அதில் ' தி யுனைட் சைக்கிள் மார்ட் ' என்ற விளம்பரம். இரண்டு சக்கரங்களுக்கு நடுவிலும் வண்ணங்கள் நிறைந்த நார் போன்ற சுலலும் தன்மையுடைய சிறிய சக்கரம். சைக்கிளின் முன்புறம் கூம்பு வடிவ டைனமோ லைட். அதை பாதுகாக்க மஞ்சள் நிற பஞ்சு துணி. சைக்கிளின் பின்புறம் வட்ட வடிவ டேன்சர் லைட். மட்காடில் அண்ணன் ஒட்டி வைத்த கபில்தேவ் படம். இரண்டு பெடல்களுக்கும் சிவப்பு நிற உறை. பச்சை நிற ஷ்டாண்ட் என பார்பதர்கே சைக்கிள் அழகாக‌ இருக்கும்.

சைக்கிளை நிறுத்துவதற்க் கென்றே அய்யனாரின் அப்பா வீட்டின் முற்றத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்திருந்தார். அப்பா வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் சைக்கிள் முற்றத்திலேயே நிற்கும். அந்நாட்களில் சைக்கிளின் பிரதான பயன்படுத்தி அப்பா மட்டுமே. அலுவலுக்குச் செல்லும் பொதும், கடைத் தெருவுக்கு செல்லும் பொதும் அதை அன்றாடம் பயன்படுத்தி வந்தார்.வீட்டிலிருந்து முக்கிய வீதியை அடைய‌ வேண்டுமென்றால் ஒரு பெரிய ஏற்றத்தை கடக்க வேண்டும். அய்யானாரின் அப்பா அந்த ஏற்றத்தை கடக்கும் போது எப்போதும் சைக்கிளிள் இருந்த்து கீழே இறங்கி உருட்டிக் கொண்டுதான் செல்வார்.கேட்டால் ஏற்றத்தில் சைக்கிள் மிதிப்பது கடினம் என்பார்.அய்யானார் வெளியூரில் இருக்கும் காலங்களில் அப்பாவை நினைத்து கொள்ளும் போது அப்பா அந்த சைக்கிளுடனே காட்சி அளிப்பார்.

சைக்கிள் ஓட்டத் தெரியாத காலங்களில் அதன் மீது ஏறி சைக்கிள் ஓட்டுவது போல் பாவனை செய்து கொள்வான் அய்யானார். குழந்தையாக இருந்த போது அவனுக்கு அம்மா நிறுத்தி வைக்கப் பட்டுள்ள சைகிளில் வைத்தே சோறு ஊட்டுவாள்.அம்மாவிற்கு அவன் அழுகையை நிறுத்துவதில் எப்போதும் சிரமம் இருந்தது இல்லை. சைக்கிளின் மணியை அழுத்தினால் உடனே அழுகையை நிறுத்திவிடுவான்.

சைக்கிள் ஓட்டுவது அய்யனாருக்கு கனவாகவே இருந்தது. சைக்கிள் கற்றுக் கொடுக்கும்படி அய்யனாரின் அண்ணனிடம் கூறி அதற்க்கான வாய்ப்பை அப்பா அளித்தார். அண்ணன் என்றதும் அய்யானார் சற்று யோசித்திருக்க வேண்டும். பாவம் சிறுவன் . அவனுக்கு அப்போது அது தொன்றவில்லை. நம்பிக்கை வைத்து அண்ணனுடன் சென்றான். முதலில் அன்புடனே கற்றுத்தற ஆரம்பித்தவன் நேரம் செல்ல செல்ல வெறுப்படைய ஆரம்பித்தான். என்ன செய்வது அய்யனாருக்கோ நேரே பார்த்து ஓட்டமுடியாமல் கண்கள் எப்போதும் பெடலுக்கே சென்றது. அப்படி செல்வதால் கைகல் ஆட ஆரப்பித்து வலைந்து நெளிந்து எல்லா முயற்சியிலும் கீழே விழுந்தான். அந்த வயதில் அய்யானாருக்கு மீசை இல்லாததால் மண் ஏதும் ஒட்டவில்லை. இபோது மீசை இருக்கிறது ஓட்டினாலும் பரவா இல்லையாம் . கேட்டாள்  ' என் மண்  ' என பிதட்றுவான்.

கோபத்தின் உச்சியை தொடுவது என்பது அய்யனாரின் அண்ணனுக்கு ஒன்ரும் அறிய விசயமில்லை. கோபம் அதை ஏற்றுக் கொள்பவனையே அழித்துவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் அன்று அய்யானாருக்கு நடந்தது அதற்க்கு முற்றிலும் எதிர்பதம். கோபத்தின் உச்சத்தில் அண்ணன் அய்யனாரை சைக்கிளொடு வைத்து தள்ளிவிட்டான். சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்கள் தரையில் எட்டாத நிலையில் நிலைத‌டுமாறி கீழே விழுந்தான். கனுக்காலிள் சிறிய கல் ஒன்ரு குத்தி குருதி வடிய ஆரம்பித்தது. இன்றும் அந்த வடு அதன் மாறாத நினைவுகளோடு அய்யானாரிடம் இருக்கிறது.

அண்ணன் எதைப் பற்றியும் கவலை படாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அய்யானாருக்கோ பெருத்த அவமானமாக‌ ஆகிவிட்டது. காரணம் அவன் விழுவதை அவனுக்கு எல்லா விசயத்திலும் போட்டியாக அவன் குடுப்பத்தாரால் உருவாக்கப்பட்ட எதிர் வீட்டு பையன் பார்த்து விட்டான் என்பதே.

அன்று முதல் சைக்கிள் ஓட்டுவது என்றாலே அவனுக்கு பதற்றம் கொள்ள ஆரம்பித்தது. அம்மாவின் வேண்டுதலுக்கு இனங்கி அப்பாவே அவனுக்கு சைக்கிள் கற்றுத்தந்தார். இப்போது முழுமையாக சைக்கிள் ஓட்ட வராவிட்டாலும் அவன் வீட்டு தெருமுனை வரை கீழே விழாமல் அவனால் சவாரி செய்ய முடிந்தது. அதுமட்டுமல்ல அம்மா அவனை அதற்கு மேல் அனுமதிப்பதில்லை. பள்ளியில் அய்யானர்தான் முதல் மாணவன்.ஆச்சர்யப்பட வேண்டாம்.பள்ளி முடியும் மணி அடித்தவுடன் வகுப்பில் இருந்து முதலில் வெளியேறும் மாணவர்களில் அவன் தான் முதல். அதற்கும் காரணம் இருந்தது. மாலை நேரங்களில் அண்ணன் தொந்தரவு எதுவும் இன்றி சைக்கிள் ஓட்டலாம். இந்த வாய்ப்பை அய்யனார் சரியாக பயன் படுத்தி சில நேர்த்திகளை கற்றுக் கொண்டான்.

அவனுக்கு சவாலக ஒரு  நிகல்வு நடந்தது. அய்யானாரின் அம்மாவிற்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. ஊரின் பெரிய வெற்றிலைக் கடையில் வாங்கியதென்றால் விரும்பி சுவைப்பாள்.  அந்த கடையோ வீட்டிலிருந்து தூரத்தில் இருந்தது. நடந்து செல்வதென்றால் சற்றே சங்கடத்தை ஏற்படுத்தும். அம்மா சந்தைக்கு செல்லும் போது நாண்கு தினங்களுக்கு தேவையான வெற்றிலைகளை வாங்கி வைத்துக் கொள்வாள். அம்மாவும் அய்யானாரும் மட்டும் வீட்டிலிருந்த தருனத்தில் வெற்றிலை பெட்டியில் வெற்றிலை தீர்ந்து விட்டது. அம்மாவிற்கு வெற்றிலை போட்டே ஆக வேண்டும். வீட்டு வேலைகள் சரியாக இருந்ததால் அவனிடம் வாங்கிவரும்படி காசை கையில் தினித்தாள். அய்யானார் சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடந்து செல்வதென்றால் முடியாது என்றும். சைக்கிள் கொடுத்தால் வாங்கி வருவதாகவும் அடம் பிடித்தான். அம்மாவும் நீண்ட யோசனைக்கு பிறகு அனுமதித்தாள். போகும் போது சாலையை இருபுறமும் பார்த்து கடக்க வேண்டும் போன்ற சில ஆலோசனைகள் கூறி அனுப்பினாள்.

அய்யனாரும் வெற்றிகரமாக தெருமுனையா கடந்து  இரண்டு பெரிய கடைத் தெருவையும் தாண்டி அம்மாவிற்கு வெற்றிலை வாங்கிதந்து விட்டான். அன்று முதல் அவனுக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவனின் சைக்கிள் ஓட்டும் திறனில் புதிய நம்பிக்கை பிறந்தது. அம்மாவின் வெற்றிலை பழக்கம் அய்யானாருக்கு பிடிக்கவில்லை.உடலுக்கு நல்லதல்ல என பல முறை கூறியிருக்கிறான். அவளின் அந்த பழக்கத்திற்காகவுகும் கடை தூரத்தில் இருந்ததற்க்காகவும் இப்போது மனதிற்குள் நன்றி தெரிவித்திக்கொண்டான். அப்பொது முதல் அய்யானாரின் சைக்கிள் சாவாரியின்  எல்லைகள் விரிய ஆரம்பித்தது.ஊரின் சந்து பொந்து அனைத்திலும் ஊர் சுற்றி வந்தான்.

அய்யனாருக்கு சைக்கிள் ஓட்டுவது இப்போது துச்சமாக மாறிவிட்டது. சைக்கிள் அவன் சொல்வதை எல்லாம் கேட்ட‌து. அவன் நிறுத்தினால் சரியான இடத்தில் நின்றது.கையை விட்டு ஓட்டினால் சரியான நேர்கோட்டில் ஓடியது.நண்பர்களை வைத்துக் கொண்டு டபுல்ஷ்,த்ரிபுல்ஷ் அடிப்பது எல்லாம் இப்போது அவனுக்கு அத்துப்படி.ஆனால் அப்போதிலிருந்து அதுவரை அவன் அண்ணன் பார்த்துக்கொண்டிருந்த வேலைகள் எல்லாம் இவன் தலையில் கட்டப்பட்டது.அப்படி என்ன வேலை என்று யோசிக்க வேண்டாம்.ரேஷன் கடைக்கு மண்எண்னைய் வாங்கச் செல்வது.ரைஷ் மில்லிர்க்கு மிளகாய் பொடி அரைக்க செல்வது அம்மாவை சந்தைக்கு கூட்டிச் செல்வது என பல வேலைகள்.அப்போதுதான் உணர்ந்தான் சைக்கிள் ஓட்டுவது சிரமம் அதுவும் எதிர்காற்றில் ஓட்டுவதென்றால் கேட்கவே வேண்டாம் என்று.அப்பாவின் சிரமமும் அவனுக்கு புரிந்தது.

அய்யனார் மேல்நிலை பள்ளியில் படித்தபோது பள்ளிக்கு செல்கையில் சைக்கிள் செயின் கலண்டு விட்டது.உட்கார்ந்து சரி செய்து கொண்டிருக்கும் போது அவன் சக‌ வகுப்பு தோழிகள் அவனை பார்த்த படியே கடந்து சென்றனர். அன்று பள்ளியை அடைய சற்று தாமதமாகிவிட்டது. ஆசிரியர் அய்யனாரை வகுப்புக்கு வெளியே அரைமணி நேரம் காக்க வைத்து விட்டார். வகுப்பு தோழிகள் சிலர் தங்களுக்குள் ஏதோ பேசி இவனை பார்த்து சிரித்தனர். இந்த நிலைக்காக சைக்கிளின் மீது கோபப்பட்டான் அய்யானார்.

நண்பர்களுடன் பக்கத்து கிராமத்திற்க்கு சைக்கிளில் சென்று பனங் கல் அருந்திவிட்டு உளரியதை இன்று வரை யாரிடமும் காட்டிக் கொடுத்து விடவில்லை சைக்கிள். கல்லூரி காலங்களில் அய்யானர் வருத்தமாக இருக்கும் போது சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகுதூரம் பயணம் செய்வான். கல்லூரி படிப்பவனுக்கு கவலை என்ன இருக்கு எதாவது காதல் கத்திரிக்காயாக இருக்கும் என்று நிங்கள் நினைத்தால் அது தவறு. அவனுக்கு இருந்த கவலையே வேறு.மொத்தமாக இரண்டு வருட தேர்வுகளிளும் தேர்ச்சி அடையாமல் இருந்தான். மூண்றாம் ஆண்டிலாவது அனைத்திலும் தேர்ச்சி அடைய வேண்டிதான் அந்த பயணம். தேர்வுக்காக கொடுக்கப்பட்ட விடுமுறையில் மனித நாடமாட்டமே இல்லாத இடத்திற்கு சைக்கிள் சென்று படித்துகொண்டிருப்பான்.அது அவனுக்கு முமுமையாக உதவியது.

சைக்கிள் அய்யனார் வாழ்க்கையில் சில மகிழ்ச்சிகளையும்,சில கோபங்களையும்,சில அவமானங்களையும்,சில உற்ச்சாகங்களையும் மாறி மாறி தந்து கொண்டிருந்தது.

பட்ட மேற்படிப்புக்காக விடுதியில் தங்கியிருந்த போது அம்மா தொலை பேசியில் அய்யானாரை அழைத்து அப்பா புதிய TVS-50 வாங்கிய விசையத்தை தெரிவித்தாள். அய்யானாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வார விடுமுறை
க்கு சென்று ஓட்டிவிட வேண்டுயதுதான் என்று மனதிற்குள் முடிவு கட்டிக்கொண்டான்.

விடுமுறை தினத்தில் வீடு வந்த போது அந்த புதிய TVS-50 எலும்பிச்சை பழம்,சந்தனம் குங்குமம் சகிதம் அழகாக வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்தது. அப்பாவிடம் சாவி வாங்கி ஊரையே ஒரு சுற்று சுற்றி வந்தான். தன் நண்பர்களிடம் அதை காட்டி பெருமை பட்டுக்கொண்டான். இரண்டு தினங்களும் தன்னை மறந்து திரிந்தான். இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு உறங்கச் சொல்லும் முன் மொட்டை மாடியில் உலாத்திவிட்டு வீட்டிற்க்குள் நுழையும் போதுதான் அதை க‌வணித்தான். முற்றத்தில் TVS-50 மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தது. சைக்கிளை காணவில்லை.அம்மாவிடம் கேட்ட போது ' அப்பாதா சைக்கிள அந்த TVS-50 காடையிலேயே கொடுத்துட்டு இந்த TVS-50 ஐ வாங்கிட்டு  வந்தாரு , அந்த சைக்குளுக்கு வெறு ஆயிரம் ரூபாதா கழிச்சுக்கிட்டானா ' என்று கூறி சலித்துக்கொண்டாள்.

அப்பாவிடம் கேட்டபோது ' எனக்கும் வ‌யசாயிருச்சு அத மிதக்க வேற முடியல‌ , நிங்களு வேலை படிப்பு அப்படி இப்படினு வெளியூருல இருக்கிங்க எதுக்கு தேவ இல்லாம அது வேற இடத்தை அடச்சுக்கிட்டு அதுதா வந்த விலைக்கி தள்ளி விட்டுட்டே.அதுதா  TVS-50 இருக்குல அது போது ' என்று சாப்பிட்ட கையை கலுவிக் கொண்டெ கொள்ளை புறத்திலிருந்து முனங்கினார்.

அய்யானாரால் நம்ப முடியவில்லை.அப்பாவால் எப்படி அதை செய்யமுடிந்தது,தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அந்த சைக்கிளுடனே கழித்துவிட்ட அப்பா இப்போது எப்படி இந்த முடிவிற்க்கு வந்தார்.
தனக்கிறுந்த அனுபவம் போல அப்பாவிற்காகவும் சைக்கிள் பல எண்ணற்ற அனுபவங்களை தந்திருக்கும்.

மொட்டை மாடி கைப்பிடி சுவரில் சாய்ந்தபடி வானத்தை வெரித்து பார்ததுக்கொண்டு  நின்றான் அய்யானார்.

அப்பா இப்போது அவர்கள் வீட்டுத் தெருவின் ஏற்றத்தை நொடியில் கடந்து வீடுகிறார்.அம்மாவாள் அடிக்கடி அப்பாவுடன் கோவிலுக்கும் சந்தைக்கும் சிரமம் இன்றி செல்ல முடிகிறது.அக்காவிற்க்கும் TVS-50 ஓட்டி கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு.அண்ணனும் அய்யானரும் எதிர்காற்றை பற்றி கவலை படாமல் ஊர் சுற்றலாம். TVS-50 அய்யானாரின் குடுப்பத்தில் ஒரு அங்கமாக முயன்று கொண்டிருந்தது.எல்லாம் இருந்தும் என்ன‌ அந்த சைக்கிளின் இடத்தை வேறு எந்த விசயத்தாலும் நிறப்ப முடியவில்லை.

யாராவது அய்யானாரின் அப்பா சைக்கிளை கண்டால் அவனிடம் செல்லுங்கள்.அவன் சைக்கிள் நல்ல உயரம். நல்ல கம்பீரம். கரும் பச்சைநிற வர்ணம் தீட்டப்பட்ட‌ சைக்கிள். அதன் கைப்பிடிகள் வலுவானவை. கைப்பிடியின் உறை கருப்பானது. கைப்பிடிக்கு சற்று மேலே அழகான பெல். பெல் பார்ப்பதற்கு பள பளப்புடன் இருக்கும். அது எழுப்பும் ஒலி இனிமையானது !.

Wednesday, December 2, 2009

பொய்மை

எப்படி எல்லாமோ
மறைத்த ரகசியம்
முதுகுக்கு பின்னால்
எட்டிபார்த்த ஒருவனால்
அம்பலமானது நடு வீதியில்

யாரேனும் ஆணையிடுங்கள்
விண்ணப்பங்களில்
வயது என்ற கட்டத்தை
அழிக்கச் சொல்லி.

Tuesday, December 1, 2009

நம்பிக்கை

வறுமையுடன் தாய் ஊரில்
ஆசையுடன் தமையன் விடுதியில்
கனவுகளுடன்  தமக்கை  புகுந்த வீட்டில்
குழ‌ப்பத்துடன் நண்பன் அருகில்
ஆவலுடன் வங்கியாளன் தொலைபேசியில்
அனைவரும் காத்திருக்கிறார்கள்
எனக்காக
நான் காத்திருப்பதோ
இவைகள் அனைத்துடனும்
இருபது தேதிக்கு பிறகு
பிரதி மாதம்
முதல் தேதிக்காக.

Wednesday, November 25, 2009

உதவாக்கரைகாதருந்த ஊசி
கால் முறிந்த‌ நாற்காலி

சிறகொடிந்த பறவை
திரிந்த பால்
ஏட்டுச் சுரக்காய்
உப்பில்லா பண்டம்
 

நான்.

Tuesday, November 24, 2009

பரிதவிப்பு

முத்தை எடுத்தவனை
காண வந்தே அலுத்துப் போனது
அலை !.

முரண்பாடு

அன்னையர் தினம்
சிறப்பாக கொண்டாடப்பட்டது
முதியோர் இல்லத்தில் !.

Tuesday, September 22, 2009

செகப்பி

தேனி  பேருந்து நிலையத்தில் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. மக்கள் எல்லோரும் பரபரப்புடன் அலைந்துகொண்டிருப்பார்கள். தென் தமிழ்நாட்டிலேயே தேனியில் தான் மிகப்பெரிய சந்தை இருக்கிறது.
 அதிகாலை இரண்டுமணிக்கே சுற்றிய்ள்ள கிராமத்தில் இருந்து விவசாயிகள் காய்கறி,பூ,தேங்காய்,ஏலக்காய் போன்ற சரக்குகளை வியாபரத்திற்காக கொண்டுவந்து இறக்கி பரபரப்பை தொடங்கிவைப்பார்கள்.இந்த பரபரப்பை அடங்காமல் பார்த்துக்கொள்வது இவர்களுக்கு அடுத்த படியாக வரும் அலுவலக பணியாளர்களும்,பள்ளி கால்லூரி மாணவ‌ர்களும்.இவர்களிடம் இருந்து பரபரப்பு உள்ளூர்,வெளியூர் பயணிகளிடம் தொற்றிக்கொள்ளும்.இளவட்டங்கள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வரை இந்த பரபரப்பு அடங்காது.பேருந்து நிலையத்தை சுற்றிலும் உணவு விடுதியும்,டீ கடைகளும் நாள் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும்.

தேனி எனக்கொன்றும் புதிய ஊர் அல்ல. எனது கல்லூரி நாட்களில் பெரும்பாலான பொழுதுகள் தேனியிலும்,அதை சுற்றியுள்ள அழகான கிராமங்களிலும்,திரை அரங்கங்களிலுமே கழிந்தது. மதுரையின் அருகில் தேனி அமைந்திருந்தாலும் இங்கு பேசப்படும் தமிழ் மதுரை தமிழில் இருந்து சற்று வித்தியாசமானது. கேட்பதற்கும்,பேசுவதற்கும் மகிழ்சியாக இருக்கும்.  வழக்கமாக டீ அருந்தும் கடையில் டீ அருந்திக்கொண்டு நண்பருக்காக காத்துக்கொண்டிருந்தேன். சாரல் அடித்துக்கொண்டிருந்தது. நண்பரும் பேசியபடி குறித்த நேரத்தில் வந்துவிட்டார். அங்கிருந்து பார்கும்பொழுதே மூணாரின் எழில்மிகு தொற்றம் தெரிந்தது. மலையின் உச்சியை மேகக்கூட்டங்கள் முத்தமிட்டுக்கொண்டிருந்தது. அந்த மலையின் உச்சிக்குத்தான் பயணம் போகிறோம் என்று நினைக்கும்போதே மனதில் உற்ச்சாகம் தோற்றிக்கொண்டது. கல்லூரி நாட்களில் பலமுறை மூணாறு செல்ல முயற்சி செய்தும் முடியவில்லை.இப்போதுதான் அதற்கான தருனம் வாய்த்தது.

பேருந்து போடியை கடந்து மூணாறு மலையில் மெல்ல ஏறத் தொடங்கியது. எங்களுடன் மலையில் தோட்ட வேலை செய்யும் பலரும் பயணம் செய்தனர். அவர்களை பார்கும்போது பெருமையாக இருந்தது.அவர்கள் மெலிந்த தேற்றத்துடன் இருந்தாலும் நல்ல ஆரொக்கியத்துடன் இருந்தனர். அவர்களின் கால்கள் நல்ல வலுவேறி இருந்தது. மலையின் மீது ஏறி இறங்குவதல் வந்த நன்மை அது. மலை மாடிகளைப்போன்று தரையில் இருந்து சட்டேன்று தொன்றிவிடுவதில்லை. தரையிலிருந்து  மலை ஆரம்பிக்கும் இடத்தை பார்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். அந்த பிரம்மாண்டமான மலை ஆரம்பிக்கும் இடம் எந்த சலணமும் இன்றி அமைதியாக இருந்தது. அதைச் சுற்றிலும் மாமரத் தோப்பும்,முருங்கைத் தோட்டமும் இருந்தது. அதுவரை பெரிதாகத் தோன்றிய வீடுகளும்,கட்டிடங்களும்,தெருக்

களும் சிறியதாக மாறத் தொடங்கின. போடியையும் அதை சுற்றியுள்ள சிறிய ஊர்களையும் பார்பதற்கு அழகாக இருந்தது. பலதடவை போடிக்கு வந்து சென்றிருந்தாலும் இப்போதுதான் அதன் மற்றுமொரு புதிய முகத்தை பார்கிறேன். எனது கைகளுக்குள் ஊரையே அடக்கிவிடலாம் போன்று இருந்தது.அந்த உயரமான இடத்திலிருந்து எங்கள் பயணம் தொடங்கிய புள்ளியை நண்பரும் நானும் தேடத் தொடங்கினோம். `

மூணரை அடந்ததுமே கூதல் காற்று மெல்ல தழுவ தொடங்கியது. அந்த தழுவலில் என்னை நான் மறந்து கிரங்க ஆரம்பித்தேன். இயற்கையின் கரங்களில் மெல்ல என்னை ஒப்படைத்தேன். மூணாரில் நாங்கள் தங்குவதற்கு தேர்ந்தெடுத்த இடம் ஒரு அழகான விடுதி.அந்த விடுதி அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருந்தது.அந்த இடத்தில் தங்குவதின் மூலம் இயற்கையுடன் நேருங்க முடியும் என்பது நண்பரின் கூற்று. அந்த விடுதியில் வேலை செய்யும் மூன்று பேரைத் தவிர நாங்கள் இருவர் மட்டுமே தங்கி இருந்தோம். விடுதியின் பின்புறத்தில் அழகான அருவியும், அருவியில் வெள்ளமும் ஓடிக்கொண்டிருந்தது.  இரவு முழுவதும் அருவியின் சத்தம் இனிமையாக கேட்டுக்கொண்டிருந்தது. உலகில் தாலாட்டிற்குப் பிறகு அருமையான இசை தண்ணீர் ஓடும் சத்தம்தான்.

அதிகாலையிலேயே எழுந்துகொண்டோம். காடு காண வெளியில் புறப்பட்டோம்.  அது அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் காட்டு விலங்களின் நடமாட்டம் இருக்கும் என்று விடுதி ஊழியர்கள் எச்சரித்தே அனுப்பினர்.  தூரல் மெல்ல தொடங்கியிருந்தது. மலைகளில் சூரியன் எப்போதுமே ஒரு சோம்பேறி. தனது பணியை தாமதமாக தொடங்கி விரைவாக முடித்துக்கொள்வான். குளிரில் உடல் நடுங்கியது. இரண்டு கைகளையும்  வேகமாக உர‌சி கதகதப்பை ஏற்படுத்திக்கொண்டேன். கதைக்கும் போது வாயில் இருந்து பனி புகையாக‌ வெளியேறிக்கொண்டிருந்தது. வனம் தந்த உற்சாகத்தில் நண்பரும் நானும் பால்ய கதைகளையும்,கல்லூரி  காலங்களின் நினைவுகளையும், எதிர்கால திட்டங்களை பற்றியும் கதைத்துக்கொண்டே வேகுதூரம் நடந்து வந்துவிட்டோம். சுயநினைவு வந்து விடுதிக்கு திரும்பலாம் என்று முடிவு செய்து திரும்பும் போது எங்கிருந்தோ வந்த ' மே ....மே..... ' என்ற குரல் எங்களை தடுத்து நிறுத்தியது. அந்த குரல் எங்கிருந்து வருகிறது என்று தெரிந்துகொள்ளவே சற்று நேரம் பிடித்தது .அந்த குரல் ஆட்டின் குரல்.அது கருப்பு நிறத்தில் இருந்த வெள்ளாடு.

ஆடு மலையின் ஆபத்தான சரிவில் நின்றுகொண்டிருந்தது.அதன் கழுத்தில் இருந்த கயிறு புதரில் சிக்கிக்கொண்டது. அந்த சிக்கலில் இருந்து ஆட்டால் தன்னை விடுவித்து கொள்ளமுடியவில்லை என்பது சிறுது நேரம் கழித்தே எங்களுக்கு தெரிந்தது. இறங்கி உதவி செய்யலாம் என்று காலை எடுத்து இரண்டடி வைத்ததுமே மண் சரிய தொடங்கி அதிலிருந்த பாறையின் சிறிய தூண்டு ஒன்று உருண்டு ஒடி அதலபாதாளத்தில் சென்று விழுந்தது.இது சரியான முய‌ற்ச்சி அல்ல என்று முடிவுசெய்தோம்.மழையும் இப்போது பெரிதாக பெய்யத்தொடங்கியது.ஒதுங்கி நிற்பதற்கும் இடம் ஏதும் இல்லை.அருகில் உதவிக்கு மனிதர்கள் யாரும் இல்லை ஒரு இரட்டைவால் குருவியைத்தவிர.சிறியதும் பெரியதுமாக கற்கலை எடுத்து புதரின் மீது எரியத்தொடங்கினோம்.கல் ஆட்டின் மீது படாமல் பார்த்துக்கொண்டோம். நினைத்ததுபோலஆடு மிரண்டு ஒட முயற்ச்சி செய்தது.இருந்தும் அந்த கயிறு புதரில் இருந்து விடுபடவில்லை.இந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.இரட்டைவால் குருவியும் பறந்து சென்ருவிட்டது.மழையில் நாங்கள் முழுவதுமாக நனைந்துவிட்டோம்.வேறு வழி தெரியாத நிலையில் அந்த இடத்தை விட்டு நகரத்தொடங்கினோம்.இதை உணர்ந்த ஆடு மேலும் உரத்த குரலில் கதரியது.அதன் குரலிள் என்னை விட்டுவிட்டு போகாதீர்கள் என்று செல்வது நன்றாகப் புரிந்தது.விடுதியை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினோம்.

எனது சிறுவயதில் எங்கள் வீட்டில் நிறைய மாடுகளும்,ஆடுகளும் இருந்தன. அதில் ஒரு ஆட்டின் வயிரு பெரிதாக இருந்தது. அது பற்றி அம்மாவிடம் கேட்டபோது அது சினையாக இருப்பதாகவும்,அதன் வயிற்றில் குட்டி ஆடு ஒன்று வளர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தாள். சில வாரங்கள் நகர்ந்த நிலையில் அந்த ஆடு திடீர் என்று உயிர் போகும் விதமாக அலரத்தொடங்கியது. வீட்டில் உள்ள பெரியவர்கள் பரபரப்பு அடைந்தனர். சில நிமிடங்களில் அதன் பின்புறத்திலிருந்து இரண்டு கால்கள் வெளிப்படதொடங்கின. ஆடு வலியில் துடித்தது கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. ஆடு இறந்து விட போய்கிறது என்றே நினைத்தேன். அம்மா காலை மெல்ல வெளியில் இழுத்தாள். சற்றேன்று குட்டி ஆடு ஒன்று வ்ந்து தரையில் விழுந்தது.ஒரு உயிரிலிருந்து இன்னோரு உயிரை உருகி எடுத்தது  அதிசியமாக இருந்தது .தாய் ஆட்டின் கண்களில் இப்போது நீர் வழியத்தொடங்கியது. அதன் கண்கள் அமைதிகொண்டன. மந்தை முழுவதும் இரத்தமும்,சதையுமாக இருந்தது. ஆடு மெல்ல குட்டியை நாக்கால் நக்கி சுத்தம் செய்யத்தொடங்கியது.குட்டி மெதுவாக கண்முழித்து உலகைப் பார்தது.அது தட்டுத் தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யத்தொடங்கியது.

குட்டிக்கு  ' செகப்பி ' என்று பெயர் சூட்டினோம். செகப்பி எப்போதும் துள்ளிக் குதிக்கும். தாயின் மடுவில் பால் குடிக்கும். செகப்பியுடன் விளையாடுவது அலாதியானது . ஆடுகள் மற்ற பிராணிகள் போல் அல்லாமல் மிகவும் அமைதியானது .எதற்கும் எதிர்ப்பு தெரிவப்பதில்லை. ஒரு நாள் தாய் ஆடு திடீர் என்று பாம்பு கடித்து இறந்துவிட்டது. தாயை பிரிந்த செகப்பி துடித்துவிட்டாள். அதன் உற்சாகம் குறையத்தொடங்கியது. பால்மட்டுமே அருந்தும் நிலையில் இருந்த செகப்பியை வளர்பதில் சிரமம் எற்பட தொடங்கியது. அம்மா புட்டி பால் கொடுத்து அதை வளர்த்தாள்.தாயை பிரிந்து வாடும் செகப்பியை என்ன சொல்லி தேற்றுவது ?.எப்போதும் செகப்பியை என்மடியில் வைத்து கொச்சிக்கொண்டிருந்தேன்.அவ்வாரு செய்தால் செவலை குட்டியாக போய்விடும் என்று பெரியவர்கள் கண்டித்தனர்.எங்கள் அரவைனைப்பில் செகப்பி பெரியவளாக வளர்ந்தாள். இரண்டு குட்டியையும் ஈன்று தாயும் ஆனாள்.இருந்தும் செகப்பியின் முகத்தில் கடைசிவரை தாயை பிர்ந்த சோகம் மாறவே இல்லை.மந்தையில் சக ஆடுகளுடன் சேராமல் தனிமையிலேயே தன் வாழ்நாளை கழித்தாள்.
செகப்பியின் நினைவு இபோது ஏன் வந்தது என்று தெரியவில்லை.  அவள் நினைவுட‌னே விடுதிக்கு திருப்பினேன். குளித்துவிட்டு படகு சாவாரி செய்யும் நிமித்தமாக ஏரிக்கு புறப்பட்டு சென்று விட்டோம். இருந்ததும் புதரில் சிக்கிக்கொண்ட ஆட்டின் கதரல்  காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.


படகு சவாரியை முடித்துவிட்டு அங்கிருந்த பச்சைப் பள்ளதாக்குகளில் நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தோம். எங்கு காணினும் பச்சையும் ஈரமுமாக இருந்த மூணாரில் எங்கள் மீதும் பச்சையும் ஈரமும் பாசி  போல படியத்தொடங்கியது. எனக்கு பழக்கப் பட்ட மேகங்கள் அனைத்தும் என் தலைக்கு மேலேயே இருந்தன. மூணாரில் மேகங்கள் என் காலுக்கு கீழேயும்,தலைக்கு மேலேயும் இருந்தது.  இரண்டுக்கும் இடையே நானும் மெல்ல உருகி புகையாக மாறி இரண்டு அடுக்குகளையும் இணைத்தேன்.நான்கு நாட்களும் சோலையில் சுற்றுவதுமாகவும்,அருவியை காண்பதுமாகவும்,தேயிலை தோட்டங்களை ரசிப்பதுமாகவும் நகர்ந்து விட்டது.

 ஊர் திரும்பு வதற்காக பேருந்தில் அமர்ந்திருந்தேன். வயதான பெரியவர் ஒருவர் கையில் ஆட்டுக்குட்டியுடன் ஏறி என் இருக்கையின் அருகில் அமர்ந்துகொண்டார். எங்கே செல்கிறீர்கள் என்று ? கேட்டபோது அருகாமையில் உள்ள தனது மகளின் வீட்டிற்க்கு செல்வதாக தெரிவித்துவிட்டு கைப்பையில் இருந்த புட்டியை எடுத்து குட்டிக்கு பாலை புகுத்த தொடங்கினார். ஏன் புட்டிப் பால் ? என்று கேட்டேன். மேய்ச்சலுக்கு சென்ற தாய் ஆடு  வீடுதிரும்பவில்லை என்றும், மூன்று தினங்களும் காடு கரை அனைத்திலும் தேடிவிட்டதாகவும் ஆடு கிடைக்கவில்லை என்றும், கிடைத்தது அதன் கழுத்தில் அணிந்திருந்த கயிறு மட்டுமே என்றும்,ஏதாவது காட்டு விலங்குகள் அடித்திருக்கும் என்றும் கூறினார்.

தனது முதுமை காரணமாக குட்டியை வைத்து வளர்பதில் சிரமம் இருப்பதால் தன் மகளிடம் சென்று சேர்த்துவிட்டால் சிரத்தை எடுத்து  வளர்துவிடுவாள் என்றும் கூறினார். குட்டி ஆடு ' மே....மே..... 'என்று கதறியது.பேருந்து முழுவதும் அதன் கதரல் எதிரோலித்தது.அதன் நாக்குகள் துடிதுடித்தது.

அன்று நாங்கள் மட்டும் சற்று சிரத்தை எடுத்து புதரின் பிடியில் இருந்து அந்த ஆட்டை விடுவித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. குற்றஉணர்சியில் புழு போல நேளிந்தேன். எனது இயலாமையையும்,பொருப்பற்ற தன்மையையும் நினைத்த போது முள் இருக்கையில் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தேன். பேச்சு வரவில்லை,கண்கள் கலங்கி இமைகளின் விழும்பில் கண்ணீர் தேங்கி நின்றது. பெரியவர் பார்த்து விடக்கூடாது என்று கைகளால் துடைத்துக்கொண்டேன். குட்டி அலரி அலரி சி(ஜீ)வன் செத்து அமைதியாகா என்னைப் பார்த்து கொண்டிருந்தது.

மற்றுமொறு செகப்பியாக வளரப்போகும் இந்த குட்டியின் வாழ்கை  என்னை பயமுறுத்தியது .என்னால் தொடர்ந்து அந்த இருக்கையில் அமரமுடியாததால் வேகமாக எழுந்து  திரும்பிப் பார்க்காமல் சென்று ஓட்டுனர் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.பேருந்து மெல்ல மூணாரில் இருந்து இறங்கியது.ஓட்டுனர் மூணாறு பயணம் எப்படி இருந்தது ?  என்றுகேட்டார்.என்ன பதில் சொல்வது ? என்று எனக்கு தெரியவில்லை.பேருந்து புழுதியை கிளப்பிக்கொண்டு தேனியை நோக்கி பயணமானது.

Tuesday, September 8, 2009

அலுமினியப் பாத்திரம்

மரங்களும்,கட்டிடங்களும் பினோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.நான் அமர்ந்து இருக்கும் இருக்கை மூன்று பேர் அமரக்கூடியது.ச(ஜ)ன்னலின் ஓரத்தில் எனக்கு பரிட்சயம் இல்லாத வயதான பாட்டியும்,நடுவில் அம்மாவும்,அம்மாவிற்க்கு அருகில் நானும் அமர்ந்து இருக்கிறேன்.ச‌(ஜ)ன்னலின் வழியே வேடிக்கை பார்க்க முயன்று கொண்டிருக்கிறேன்.அம்மா குனிந்து உட்காருமாரு என்னை வற்புறுத்திக் கொண்டிருக்கிறாள்.ச‌(ஜ)ன்னல் ஓர இருக்கை கிடைக்காததில் மிகுந்த வருத்தத்துடனே என் பயணம் தொடங்கியது.

அம்மா நடத்துனரிடம் டிக்கேட் கேட்கிறாள்.எனக்கும் முழு டிக்கேட் எடுத்தே ஆகவேண்டும் என்று நடத்துனர் விவதித்துக்கொண்டிருக்கிறார்.நீ
ண்ட விவாதத்திற்க்குப் பிறகு அம்மா எனக்கும் முழு டிக்கேட் வாங்கினாள்.இது எனக்கு பெருமையை ஏற்ப்படித்தியது.அன்று தான் முதன் முதலில் அரை டிக்கேட்டாக இருந்த நான் முழு  டிக்கேட்டாக மாறிய தினம்..டிக்கேட்டை வாங்கி பத்திரமாக மேல் சட்டையில் வைத்துக்கொண்டேன்.
கோடை விடுமுறைக்காக அம்மா என்னை எங்கள் கிராமத்தி்ற்க்கு அழைத்துக்கொண்டு போகிறாள். அந்த வயதில் பெரும்பாலான என் விடுமுறை நாட்கள் அனைத்தும் அந்த சிறிய கிராமத்தில்தான் செலவழிக்கப்படும். எங்கள் கிராமத்திற்க்கு நேரடியான  பேருந்து வசதி கிடையாது. அதனால் ஒரு விலக்கில் ( பிரிவு ) இறங்கி அங்கிருந்து மற்றொரு பேருந்தில் செல்ல  வேண்டும். பேருந்து இப்போது காட்டுப்பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அப்போது ஒரு வகையான வாசம் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அது உளுந்து வாடையைப்  போல் இருந்தது. அது பற்றி அம்மாவிடம்  கேட்ட போது பாம்புகள் அதிகம் வசிக்கும் இடமாக இருந்தால் இவ்வாறு வாசம் வரும் என்று கூறினாள்.

நாங்கள் விலக்கில் வந்து இறங்கினோம். அங்கிருந்து பார்க்கும் போதே எங்கள் கிராமத்தின் அழகான மலையும்,மலையின் மீதுள்ள கோவில் கோபுரமும் நன்றாக தெரிந்தது.அம்மா கோபுரம் இருக்கும் திசை நோக்கி வணங்கிகொண்டே என்னையும் வணங்குமாரு வற்புறுத்தினாள். ஏற்கனவே பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தவர்களில் அம்மாவின் தோழிகள் சிலரும் இருந்தனர். அவர்களின் குழந்தைகள் பற்றியும்,குடும்ப நலன் பற்றியும் அம்மா விசாரித்து கொண்டிருந்தாள். நாங்கள் நின்று கொண்டிருக்கும் இடம்  இரண்டு சாலைகளை இணைக்கும் இடம்.  அந்த இடத்தை சுற்றிலும் வயல்கள். வயல்கள் முழுவதும் அறுவடை செய்யப்பட்டிருந்தது. வயலின் மேற்பரப்பு வேடித்து  சிறு சிறு துண்டாக இருந்தது. வரப்புகளில் இருந்த‌ புல்கள் பச்சை நிறத்தை  இழந்து,சாம்பல் நிற வேடம் அணிந்திருந்தது. சாலையின் இரு மருங்கிளும் வரிசையான புளியமரங்களும்,அதன் அருகில் ஓடை ஒன்ரும் இருந்தது. ஓடையில் தண்ணீர் ஓட  வில்லை. தாகத்துடன் என்னை முறைப்பது போல் இருந்தது. ஓவ்வொரு புளியமரத்தின் நடுவிலும் கருப்பு வர்ணம் அடித்து அதில் வெள்ளை நிறத்தில் எண்கள் வரிசையாக எழுதப்பட்டிருந்தது. அந்த எண்கள் எந்த ஊரின் மரத்தில் ஆரம்பித்து எந்த ஊரின் மரத்தில் முடியும் என்று நினைத்து பார்க்க பார்க்க மலைப்பாக இருந்தது.

கிராமத்திற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிட்டன. அம்மா இப்போது என்னை விட்டுவிட்டு ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறாள். அம்மாச்சி வீட்டிற்க்கு தேவையான அரிசி,பருப்பு,கோழி முட்டைகள்,புளியம் பழங்கள் அனைத்தும் அம்மாவிற்க்கு கொடுத்து அனுப்பினாள். அம்மாவின் பிரிவு வருத்தம் அளித்தாலும், அம்மாச்சியின் அரவனைப்பு அதை மறக்க செய்து கொண்டிருந்தது.


எங்கள் வீட்டின் அருகிலேயே எனக்கு மூன்று கூட்டாளிகள் (  நண்பர்கள் ) இருந்தனர். விடுமுறை நாட்களின் பெரும்பாலான பகல் பொழுதும்,மாலை பொழுதும் அவர்களுடனே கழிந்து கொண்டிருந்தது. கூட்டாளிகளில் ஒருவன் மிகவும் வினோதமானவன். என்னை விட இரண்டு வயது பெரியவன்.எப்போதும் காடு,மலை,ஏரி என்று அழைந்து கொண்டிருப்பான்.
பனை மரங்களில் ஏறி நொங்கு பறித்துக்கொடுப்பான் .கையில் எப்பொழுதும் அரிவாளுடன் சுற்றிக் கொண்டிருப்பான் . கிணற்றின் மேலிருந்து குதித்து நீரில் மூழ்கி தரையைத் தொட்டு மண்னை எடுத்து வந்து ஆச்சர்யப் படுத்துவான். தூண்டில் போட்டு மீன் பிடிப்பான்.ஓணானை பி்டித்து மூக்குப்பொடி போட்டு கிருகிருக்க வைப்பான்.உண்டிவில்லால் எதையும் குறி பார்த்து அடிப்பான்.


அய்யாவிற்க்கு அவர்களுடன் சேர்ந்து நான் ஊர் சுற்றுவது பிடிக்கவில்லை.எப்பொதும் என்னை திட்டிக்கொண்டே இருப்பார். ' ஊரில் அடிக்கும் வெயில் எல்லாம் உன் தலையில் தான் விழுகிறது ' என்று கதவை மூடி மதியான வேளைகளில் வலுக்கட்டாயமாக உறங்கவைப்பார்.மாலை வேலையில் நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ' கூட்டாஞ்சோறு ' ஆக்கி யாருக்கும் தெரியாமல் திண்றதை  என்னிடம் தெரிவித்தான். கூட்டாஞ்சோறு என்பது வீட்டிற்க்கு தெரிந்தோ  ( அ ) தெரியாமலோ நண்பர்களுடன் சேர்ந்து விருப்பியதை சமைத்து சாப்பிடுவது.
' எனக்கும் கூட்டாஞ்சோறு சாப்பிடவேண்டும்  ' என்ற ஆசை எழுந்தது.அதை கூட்டாளியிடம் தெரிவித்தேன்,அவர்களும் அதற்க்கு சம்மதித்தனர். ஆனால் சமைப்பதற்கு தேவையான பாத்திரமும்,தேவையான பொருட்கள் வாங்க காசும்  நான் தான் கொண்டுவர வேண்டும் என்று முடிவானது. அய்யாவிடம் சென்று சம்மதம் வாங்கி கூட்டாஞ்சோறு கணவை நினைவாக்கிக் கொள்வது என்பது முடியாத காரியம். நண்பர்களிடம் வேறு சம்மதம் தெரிவித்தாகிவிட்டது.எனக்கு தெரிந்த ஓரே வழி அய்யாவிற்கு தெரியாமல் பணத்தையும்,பாத்திரத்தையும் ஏற்பாடு செய்வது.


அதற்க்கான தருணத்திற்க்காக காத்துக் கொண்டிருந்தேன். அன்று மதிய உணவிற்குப் பிறகு அய்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அம்மாச்சியும் சந்தைக்கு சென்றுவிட்டார். இதுவே சரியான நேரம் என்று முடிவிடுத்தேன்.எப்போதும் அய்யாவின் இடுப்பில் இருக்கும் அந்த பர்ஷ் வைத்த பச்சை நிற பெல்ட் அன்று தலைமாட்டில் இருந்தது. தேவையான பணத்தை அதிலிருந்து எடுத்துக்கொண்டேன். அடுப்படிக்குச் சென்று பார்த்த போது என் கண்ணில் விழுந்த முதல் பொருள் அந்த  ' அலுமினியப் பாத்திரம் '  அதையும் சாக்கில் வைத்து எடுத்துக்கொண்டு பூனை போல வீட்டிலிருந்து வெளியேறினேன்.

வீட்டிலிந்து தெருமுனையை கடக்கும் வரை எனக்கு இருந்த பதற்றத்தில் கண்ணும் காதும் சற்று நேரம் தனது பணியை நிறுத்தி இருந்தது. கூட்டாளிகளிடம் அதைக் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்க்கு வந்து யாருக்கும் தெரியாமல் படுத்துக்கொண்டேன். அம்மாச்சியும் இப்போது சந்தையில் இருந்து வந்துவிட்டாள். வாங்கி வந்த மீனை சமைப்பதற்க்காக இப்போது அந்த அலுமினியப் பாத்திரத்தை தேடிக் கொண்டிருக்கிறாள். எனக்கு பயத்தில் சிறுநீர் கழிக்காவேண்டும் போல் இருக்கிறது. சற்று நேரம் அதை தேடிவிட்டு வேறு பாத்திரத்தில் சமைக்க தொடங்கினாள்.


மறுநாள் காலை திட்டமிட்டபடி கூட்டாஞ்சோறு சமைப்பதற்க்காக தயாரானோம். நண்பர்களில் ஒருவன் எங்களை மலையின் ஒரு பகுதியில் இருந்த காட்டுப் பகுதியில் காத்திருக்க வைத்துவிட்டு சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுவிட்டான். நேரம் கழிந்து கொண்டே போகிறது , பொருட்களை வாங்க சென்ற கூட்டாளி இன்னும் வரவில்லை. பதற்றமும் உற்ச்சாகமும் அதிகரித்தக் கொண்டிருந்த நிலையில் நண்பன் பொருட்களுடன் வந்துவிட்டான். அவன் கையில் மூன்று பொட்டலங்களும்,நெய்யும்,தீப்பெ
ட்டியும் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது ஒன்றில் அரிசியும்,ஒன்றில் வெள்ளக்கட்டியும்,ஒன்றில் பொட்டுக்கடலையும் இருந்தது. இதை வைத்து என்ன செய்ய போகிறாய் ? என்று கேட்டபோது சர்க்கரை பொங்கலும்,கடலை உருண்டையும் என்று கூறிக்கொண்டே அதற்க்கான காரியத்தில் ஈடுபட தொடங்கினான். மலை அடிவாரத்திலேயே நன்நீர் குளம் இருந்ததால் தேவையான தண்னணீரை அதிலிருந்து எடுத்துக்கொண்டோம்.


மூன்று கற்களை வைத்து,அதன் மேல் பாத்திரத்தை வைத்து , சுள்ளிகளை பொறுக்கி உள்ளே திணித்து நெருப்பு மூட்டி அவன் தயார் செய்து கொண்டிருந்த விதம் அச்சர்யத்தை அளித்தது. இபோது எனக்கிருந்த கவலை கிண்டு வதற்க்கு தேவையான கரண்டியை எடுத்துவர மறந்துவிடேன் என்பது. நண்பன் அதைபற்றி கவலை ஏதும் இன்றி மரக்கிளையை ஒடித்து அதை கரண்டி போல் பயன்படுத்த தொடங்கினான். சர்க்காரை பொங்கல் தயாராகிவிட்டது . இன்னும் செய்ய வேண்டியது கடலை உருண்டை மட்டுமே. அதை தயார் செய்யும் வரை ' யாரும் சர்க்காரை பொங்கலில் கைவைக்க கூடாது ' ! என்று வேறு கட்டளை இட்டான். எனக்கு வேறு நாக்கில் எச்சில் ஊறிக்கொண்டிருக்கிறது.வெள்ளத்தை பாகாக காய்ச்சி அதில் கடலையைப்  போட்டு உருண்டையாக உருட்டி , கடலை உருண்டையையும் தயார் செய்துவிட்டான்.


அருகில் இருந்த செடிகளில் இருந்து இலைகளைப் பறித்து அனைத்தையும் ஒன்றாக தைத்து பெரிய தொன்னை போல் அவன் செய்திருந்த தட்டு அழகானது. அனைவருக்கும் அவனே இலைகளில் சர்க்கரை பொங்கலையும்,கடலை உரு்ண்டையையும் சமமாக பரிமாரினான்.பொங்கலை எடுத்து வாயில் வைத்த போது அது வாயில் இருந்து வழுக்கி , .குடலில் சரிந்து , அடிவயிற்றில் முட்டி நின்று  , கரைந்து கொண்டிருந்தது. அதற்குள் நாக்கு தேவையான ருசியை உரிஞ்சிக்கொண்டு , மூளைக்கு தான் திருப்தி அடைந்த தகவலை அறிவித்துவிட்டது. ' தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் பார்க்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்தத்தி்ற்க்காக சண்டை போட்டதை ' அம்மா கதையாக கூறியிருக்கிறாள்.அந்த அமிர்தம் கண்டிப்பாக இந்த சர்க்கரை பொங்கலைவிடவும் சுவையில் சற்று குறைவாகவே இருந்திருக்க  வேண்டும் ! என்று மனம் கூறியது.


குளத்தில் குளித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.  வீடு நெருங்க தொடங்கிய போது எனக்குள் பயம் தொடங்கியது.காரணம் பாத்திரத்தை மீண்டும் யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைக்க வேண்டும். நண்பர்களிடம் கேட்ட போது ' அய்யா இப்போது உறங்கிதான் ' கொண்டிருப்பார் , அதில் ஒன்றும் அவ்வளவு சிரமம் இருக்காது என்று கூறி சமாதானம் செய்தனர்.

 அவரவர் வீடு வந்ததும் நண்பர் அனைவரும் பிரிந்து சென்றவிட்டனர். கையில் பாத்திரத்துடன் சென்ற எனக்கு அதிர்ச்சி. அய்யா தின்னையில் உட்கார்ந்திருக்கிறார்.வாயில் சுருட்டு புகைந்து கொண்டிருந்தது.  ' என்னிடம் கேட்காமல் ஏன் பணத்தை எடுத்தாய் ? '  என்று அம்மாச்சியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அதை அம்மாச்சி மறுத்துக்கொண்டிருந்தாள்.  இது சரியான நேரம் அல்ல என்று உணர்ந்து பாத்திரத்தை வீட்டின் அருகில் இருந்த புதரில் மறைத்து வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன். அனுமதி பெறாமல் வெளியில் சென்று விளையாடி விட்டு வந்ததற்க்காக என்னை அடிக்க குச்சியை தேடிக்கொண்டிருந்தார் அய்யா. அம்மாச்சி என்னை அவரிடம் இருந்து காப்பாற்றினாள்.


மறுநாள் காலை பாத்திரத்தை புதரில் மறைத்து வைத்த செய்தியையும்  , அந்த இடத்தையும் கூட்டாளியிடம் காட்டினேன். '  இன்று எப்படியும் அய்யா வயலுக்கு சென்றவுடன் வீட்டிற்குள் சென்று சேர்த்துவிடலாம் '  என்று அவன் கூறினான். மாலை நேரம் நினைத்தது போலவே  அய்யா வயலுக்கு சென்றுவிட்டார். பாத்திரத்தை எடுத்து வரலாம் என்று புதருக்குள் சென்றேன். அதிர்ச்சியில் மனம் பதறியது. மறைத்து வைத்த இடத்தில் பாத்திரத்தை காணவில்லை. ஓட்டமும் ,  நடையுமாக நண்பனிடம் சென்று அதை கூறினேன். அவன் எந்த பதற்றமும் இல்லாமல் '  தான் தான் அதை எடுத்ததாக கூறினான் ! '  . நீண்ட பெருமூச்சுடன் அதை தறுமாரு கேட்டேன். அவன் முழிக்கத் தொடங்கினான் ,  வாய் எதையொ மேன்றுகொண்டிருந்தது.சட்டையை பிடித்து உழுக்கியபோது. ' அதை பழைய பாத்திரக் கடையில் போட்டு பேரிச்சம் பழம் வாங்கி விட்டதாகவும் '  , தான் தின்ற பேரிச்சம் பழம்போக மீதியை என்னிடம் நீட்டினான். கோபம்  தலைக்கேறி  ' எதற்க்காக அவ்வாறு செய்தாய்  ? என்று கேட்டதற்க்கு  ' ஒரு வேளை வீட்டிற்குள் எடுத்துச் செல்லும்  போது பிடிபட்டால் நீ மட்டுமல்ல ! அனைவரும் மாட்டிக்கொள்வோம் ! '  அதனால்தான் அவ்வாறு செய்ததாக விளக்கம் அளித்தான். கடையில் சென்று பார்த்தபோது அந்த பாத்திரம் அடித்து நெளிக்கப்பட்டு ஒரு மூலையில் கிடந்தது.


ஒரு சில நாட்கள் கழிந்த நிலையில் மீண்டும் அம்மாச்சிக்கு பாத்திரத்தின் நினைவு வந்து தேட துவங்கினாள்!. தனது ஞாபக மறதியைப் பற்றி தனக்குத் தானே சத்தமாக புலம்பிக் கொண்டே , அடுப்படியில் சமைத்துக் கொண்டிருந்தாள். நான் ஏதும் அறியாதவன் போல அவள் செய்து கொடுத்த பொரி அரிசியை தின்று கொண்டிருந்தேன்.  மேலும் சில நாட்கள் கழிந்த நிலையில் பாத்திரத்தின் நினைவு அம்மாச்சியின் மூளையிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது.


விடுமுறை முடியும்  தருவாயில் அம்மா என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தாள். அய்யா  ' நான் செய்த சேட்டைகளையும் ' , எப்படி இவனை சமாளிக்கிறாய் ? என்றும் வருத்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் . மாலை பேருந்தில் ஊர் செல்ல நானும் அம்மாவும் கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தோம். வரும் வழியில் பழைய பாத்திரக் கடையை கடக்கும் போது , பாத்திரத்தின் நினைவு வந்து திரும்பிப் பார்த்தேன். கடை மூலையில் இப்போது அந்த அலுமினியப் பாத்திரம் இல்லை. பேருந்து கிளம்பியது கூட்டாளிகள் கை அசைத்து  வழியனிப்பினர். அந்த பாத்திரத்தின் நெளிந்த முகம் என் கண்முன் ஒருமுறை தோண்றி எனக்குள் சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தது. அந்த சிரிப்பின் மூலம் நான்  ' முழு  டிக்கேட் ' என்று உலகத்திற்கு தெரிவிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

Monday, August 31, 2009

மோதி விளையாடு - Part 2

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு,ஆவடி இந்து கல்லூரியில் போட்டி என்று அறிவிப்பு வெளியான தினத்திலிருந்தே எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது.இந்த முறையாவது வெற்றி பெற்றே ஆக‌ வேண்டும் என்று மனதில் முடிவு செய்துகொண்டு,கணினியிலிருந்து 'ஒவ்வொரு பூக்களுமே" பாட்டை திரும்ப திரும்ப‌ ஒலிக்க விட்டேன். ராஜன் "தான் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து" விலகிக்கொள்வதாகவும்,பீரவீனை புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் வற்புறுத்தினார்.காரணம்,சென்ற வாரங்களில் கிடைத்த கசப்பான தோல்விகள்.பீரவீனும் அரை மனதுடன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்.தொடர் தோல்விக்குக் காரணம் அணிதலைவர் அல்ல, அணியின் திறமையின்மையே என்று அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது.சனிக்கிழமை வலைப்பயிற்சியை சிறப்புடன் மேற்கொள்வதன் மூலம் குறைகளை நிவர்த்தி செய்யலாம் என்று முடிவானது.ஆனால் வலைப்பயிற்சியில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றத்தை எங்களால் உணரமுடியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை நான்கு மணிக்கே தூக்கத்தில் இருந்து எழுந்துகொண்டேன்.அறையில் விளக்கை எரியவிட்டுக்கொண்டு மட்டையை எடுத்து பயிற்சி செய்துகொண்டிருந்தேன்.அறை நண்பர் எரிச்சல் அடைந்து விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் தூக்கத்தின் கரங்களில் சிக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தார்.நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாலாவது எனக்காக அவர் தன் தூக்கத்தை தியாகம் செய்திருப்பார் :).

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6:30 மணிக்கு ஆவடி கிளம்பவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தோம்.அதன்படி நான் 5:50 மணிக்கெல்லாம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்துவிட்டேன்.அன்று முகூர்த தினம் என்பதால் குழந்தைகளும்,பெண்களும் அழகான உடைகளை அணிந்துகொண்டு என்னைவிட உற்சாகமாகவும்,வேகமாகவும் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

அணியினர் அனைவரும் திட்டமிட்டபடி 7:30 மணிக்கெல்லாம் இந்து கல்லூரியை அடைந்தோம்.அப்போது வேகமாக வந்து நின்ற வேனில் இருந்து இறங்கிய மற்றொரு அணியினர் அனைவரும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினர்.அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் முறையிலிருந்தே அவர்கள் வலுவான அணி என்று மனதில் முடிவுகட்டிக்கொண்டேன்.அவர்களிடம் சென்று விசாரித்ததிலிருந்து , அவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள வந்திருப்பதாகவும், எங்களுடன் விளையாட வேண்டிய அணி இன்னும் வரவில்லை என்றும் கூறி, என் நெஞ்சில் பால் வார்த்தனர்.எங்களுடன் விளையாட இருக்கும் அணியினர் இப்போழுது மைதானத்தை அடைந்துவிட்டனர்.அவர்கள் அனைவரும் வேறு வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்றும் தங்களுக்குள் அணி உருவாக்கி விளையாடி வருவதாகவும் தெரிவித்தனர்.

டாசில் வெற்றிபெற்ற எதிரணித் தலைவர் எங்களை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இது எங்களுக்கு வருத்தத்தையோ,மகிழச்சியையோ தரவில்லை. காரணம், சென்ற போட்டிகள் அனைத்திலும் முதலில் பேட்டிங் செய்தும் தோல்வி அடைந்துள்ளோம், பவுலிங் செய்தும் தோல்வி அடைந்துள்ளோம்.பீரவீனும்,மகேந்திரனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.எதிர்பாராதவிதமாக சந்தித்த பந்துகள் பல நான்காக மாற்றப்பட்டது.அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக வந்துகொண்டிருந்தது.இன்று எப்படியும் ஸ்கோர் 230 க்குமேல் செல்லும் என்று சுரேஷ் கூறிக்கொண்டிருக்கும் போதே பீரவீன் திடீர் என்று பாயின்டில் கேட்ச் பிடிக்கப்பட்டு பெவிலியன் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஒன்டவுன் என்ற முக்கியமான இடத்தில் இப்போது ராஜன் களமிறங்கினார்.சொல்லிச்சென்றபடியே அருமையாக விளையாடிக்கொண்டிருந்தார்.சிக்சர் அடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து பவுன்ட‌ரி லைனில் கேட்ச் பிடிக்கப்பட்டார்.இப்பொழுது எங்கள் அணியின் ஸ்கோர் 92.இன்னும் 17 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் களமிறங்கிய சுனில்,கார்த்திக்,ராஜகோபால் ஆகியோர் ரன் எதும் எடுக்காமலும்,சொற்ப ரன்கள் எடுத்தும் விக்கட்டை இழந்து,இந்திய வீரர்களைப் போன்றே கவலை தோய்ந்த(?) முகத்துடன் பெவிலியன் திரும்பினர்.கார்த்தியின் பொறுப்பற்ற ஆட்டத்தைக் குறை கூறித் திட்டிக்கொண்டே மனதில் குல‌தெய்வத்தை நினைத்துக்கொண்டு , மிகுந்த தைரியத்துடன் களமிறங்கினேன்.

இப்பொழுது நானும் விஜயனும் களத்தில் இருக்கிறோம்.
விஜயனிடம் சென்று எனது பதட்டத்தையும் , இன்னும் 12 ஓவர்கள் இருப்பதையும் கூறினேன்.நிதானமாக ஆடி அனைத்து ஓவர்களையும் முழுமையாக விளையாட வேண்டிய கட்டாயத்தை அவரிடம் தெரிவித்துவிட்டு , முதல் பந்தை சந்திக்க தயாரானேன்.முதல் பந்தை கண்களை அகல விரித்து, , விழிப்புடன் தடுத்தாட முயன்றேன்.ஸ்டெம்பின் மீதுள்ள காதலால் பந்து பைல்ஷ்யை முத்தமிட்டு சென்றது.மனதில் வெறுப்பு ஊற்றெடுத்து உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது.மூன்று மாத வலைப்பயிற்சி,நேரம்,பணம் அனைத்தும் விர‌யமாகிவிட்டது போல் உணர்ந்தேன்.கார்த்திக் என்னை பார்வையால் சூரியனை விட அதிகமாக எரித்துக்கொண்டிருந்தார்.பெவிலியன் திரும்பி சுயநினைவிற்கு வருவதற்குள் எங்கள் அணி அனைத்து விக்கட்டையும் இழந்தது.எதிரணிக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்தோம்.இதை இலக்கு என்று சொல்வது எனக்கு சற்று மிகையாகவே தோன்றுகிறது.சொற்ப ரன்கள் என்றே வைத்துக்கொள்வோம்.


அணியினர் அனைவரின் மனதிலும் வெற்றிடம் தோன்றி,உற்சாகம் இழந்திருந்தோம். முப்பது ஓவர் வீசி 115 ரன்களுக்குள் எதிரணியினரை சுருட்டுவது என்பது இயலாத காரியம்தானே.
முதல் ஓவரை சந்தோஷ் வீசவேண்டும் என்றும்,இரண்டாவது ஓவரை வீச யாரை அழைக்கலாம் ? என்றும் அணித்தலைவர் எங்களுடன் விவாதித்துக்கொண்டிருந்தார்.நான் சுரேஷின் மீது நம்பிக்கை வைத்து, அவரை பரிந்துரைத்தேன்.பீரவீன் அதை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்தது.காரணம் கடந்த நான்கு போட்டிகளின் போதும் சுரேஷ் வீசிய அகலபந்துகளின் எண்ணிக்கை சற்றே அகலம்,சாரி சற்றே அதிகம்.இருந்தும் சுரேஷின் இன் சுவிங் டெலிவரியின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக இரண்டாவது ஓவரை அவர்தான் வீச வேண்டும் என்று முடிவானது.


முதல் ஓவரை இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டத்தை அருமையாகத் தொடங்கிவைத்தார்.இப்போது சுரேஷின் ஓவர். தொடர்ந்து நான்கு அகலபந்து மற்றும் நான்கு ரன்களை கொடுத்து ஒரு வழியாக ஓவரை முடித்தார்.பீரவின் மற்றும் ராஜனின் கடுமையான கோபத்தை சம்பாதித்துக் கொடுத்ததுதான் சுரேஷ் செய்த நல்ல காரியம்.இரண்டு ஓவர் முடிந்த நிலையில் எதிர் அணியினர் ஸ்கோர் 15 ஆக இருந்தது.தொடர்ந்து நானும்,கார்த்திக்கும் அருமையாக பந்து வீசி எங்களின் ஸ்பெல்லை நிறைவு செய்திருந்தோம்.தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டிவந்த பெருமை கார்த்திக்கையே சேரும்.
அடுத்து வந்த அப்துல் மற்றும் மகேந்திரன் தங்களது முழுத்திறமையையும் பயன்படுத்தி எதிரணியினரை திணறடித்துக் கொண்டிருந்தனர்.உச்சி வெயில் சூரியன் வேறு தன் கோபக் கண்களால் என்னை திணறடித்துக் கொண்டிருந்தான்.


தண்ணீர் இடைவேளை வந்தபோதுதான் எனக்கு தெரியவந்தது :எதிரணியினர் 52 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர் என்றும்,இன்னும் வெற்றிக்கு தேவையான 64 ரன்களை அடுத்து வரும் 15 ஓவர்களில் எடுக்கவேண்டும் என்றும்.இது எனக்கு சற்றே தெம்பை அளித்தது. காரணம் 15 ஓவர்களில் 64 ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம்.ஆனால் 8 விக்க‌ட்டையும் வீழ்த்துவது என்பது சற்றே முடியக்கூடிய‌ காரியம்.
அணியினர் அனைவரும் ஒன்று கூடினோம்.ஃபீல்டிங் முறையை மாற்றி அமைப்பது என்று முடிவானது.பதினாறாவது ஓவரின் மூண்றாவது பந்தில் சந்தோஷ் ஓரு விக்க‌ட்டை வீழ்த்தி என் நம்பிக்கையை மேலும் அதிகரித்தார்.ரன் அவுட் என்ற முறையில் பீரவீன் மேலும் இரண்டு விக்க‌ட்டை வீழ்த்தினார்.

 இன்னும் 5 விக்க‌ட்டுகளே உள்ளன வெற்றிக்கு.இப்பொழுது களத்தில் இருக்கும் எதிரணி வீரர்கள் ஜோடி சேர்ந்து கணிசமாக ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தனர்.இது சற்றே பதற்றத்தை ஏற்படுத்தியது.இந்த ஜோடியை உடைக்கும் பொறுப்பை பீரவீன் என்னிடம் கொடுத்தார்.அந்த ஓவரில் இரண்டு விக்க‌ட்டை வீழ்த்தினேன்.இபோதுதான் பீரவீனின் முகத்தில் நம்பிக்கை ரேகைகள் தெளிவாகத் தெரிந்தது.அந்த ரேகைகளில்,வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது என்பது எங்களுக்கும் தெரிந்து,அணியினர் அனைவரும் வெறியுடன் விளையாடத் தொடங்கினோம்.


தொடர்ந்து வந்த ஓவரை வீசிய கார்த்திக் மேலும் இரண்டு விக்க‌ட்டை வீழ்த்தி அசத்தினார்.இப்போது 30 வது ஓவரை வீச மகேந்திரன் அழைக்கப்பட்டார்.ஆறு பந்துகளில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எதிரணி நண்பர்கள் விளையாடத் தயாராயினர். சொற்ப ரன்களாக தெரிந்த ஸ்கோர், இப்பொழுது இலக்காக மாறியிருந்தது என்பது எதிரணி ஆட்டக்காரர்களின் பதட்டத்தின் மூலம் நன்றாக தெரிந்தது.
முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களே எடுத்தனர்.மூன்றாவது பந்தை படு நேர்த்தியாக வீசினார் மகேந்திரன்.அது ஆட்டக்காரரை ஏமாற்றி பைல்சை பறித்தது.இதோ நாங்கள் எதிர்பார்திராத வெற்றி எங்களுக்கு சாத்தியமானது.அணியினர் அனைவரும் உற்சாகத்தில் மிதந்துகொண்டிருக்கிறோம்.


தொடர் தோல்விகளுக்குப் பின் கிடைத்த இந்த வெற்றி எனக்கு மன நிறைவைத் தந்தது.வெற்றிக்களிப்பில் அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன்.அம்மா "ஊரில் நல்ல மழை பெய்துகொண்டிருப்பதாகவும் ,வெம்மை குறைந்து ஊரே குளிர்ச்சி அடைந்து விட்டதாகவும் " தெரிவித்துக்கொண்டிருந்தார்.சிறுவர்கள் ஆடிப் பாடும் சத்தமும் தொலைபேசியின் வழியே கேட்டது.என் மனதிலும் மழை பெய்யாமலேயே,குளிர்ச்சி வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதை எப்படி தெரிவிப்பது என் அம்மாவிடம் ?

Tuesday, August 25, 2009

வீடு

நண்பர் ஒருவருக்கு திருமணம் நிச்ச‌யக்கப்பட்டு இருந்ததால்,திருமண வாழ்வை தொடங்குவதற்காக வாடகை வீடு தேடும்பணியில் ஈடுபட்டிருந்தார். என்னிடமும் அதுபற்றி கூறியிருந்தார். தி‍‍‍‍.நகரில் வீடு வாடகைக்கு இருப்பது பற்றி மற்றொரு நண்பர் மூலம் தெரிந்துகொண்ட நான் , நண்பரை அழைத்துக்கொண்டு வீடு பார்க்கச் சென்றிருந்தேன். வீட்டைப்பார்த்த நண்பர் வீடு பிடிக்கவில்லை என்றும்,வீட்டில் ஒரு மரம் கூட இல்லையென்றும்,மரம் இல்லாத வீட்டில் குடியிருக்க விருப்பம் இல்லை என்றும் கூறினார். இப்போது சென்னையின் ஒதுக்குப்புறமான இடங்களில் வீடு தேடிக்கொண்டிருகக்கிறார்.

என் சொந்த‌ ஊரில் எங்க‌ளுக்கென்று சொந்த‌ வீடு ஒன்று உள்ளது. அதில் அம்மா உருவாக்கிய வேம்பு,கொய்யா,தென்னை ம‌ர‌ங்க‌ள் உள்ளன .ம‌ர‌ங்க‌ள் இல்லாத‌ வீட்டில் வாழ்வது குழந்தைகள் இல்லாத வீட்டில் வாழ்வது போன்ற உணர்வை ஏற்ப்படுத்துவது தவிர்க்கமுடியாததுதான். சொந்த வீடு கட்டி குடியேறும் முன்பு நாங்க‌ள் வ‌சித்த‌து ஒரு வாட‌கை வீடு. சிறிய வீடே என்றாலும் மிக‌வும் அழ‌காக இருக்கும். கூரையில் ஓடு வேய‌ப்ப‌ட்டிருக்கும்.வீட்டை ஒட்டி அழகான கிணறும்,கிணற்றடியை ஒட்டி அழகான த‌ண்ணீர் தொட்டியும்,அதையொட்டி துணி துவைக்க ஏதுவாக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல் மேடையும் உண்டு. கிணற்றடியை சுற்றிலும் அழகான தென்னை ம‌ர‌ங்க‌ளும்,வேப்ப‌ ம‌ர‌ங்க‌ளும் இருந்தன.

கிணற்றடியில் எப்போதும் அணில்க‌ள் விளையாடிக் கொண்டிருக்கும். வெளியில் சென்று விளையாட‌ அனும‌தி இல்லாத அந்த‌ சிறுவ‌ய‌தில் அணில்க‌ளுட‌ன் பேசி விளையா‌டி இருக்கிறேன். சில நேரங்களில் குரங்குகள் வந்து வீட்டின் மேல் காயவைத்திருக்கும் வடகம்,வத்தல் போன்றவற்றை தின்றுகொண்டிருக்கும். அதை நான் பயம் கலந்த உற்ச்சாகத்துடன் பார்த்திருக்கிறேன். அம்மா அதை ராமா,ராமா போய்விடு என்று வணங்கிகொண்டிருப்பாள். ஒரு நாள் கொக்கு ஒன்று இற‌க்கையில் அடிப‌ட்டு ப‌றக்க முடியாம‌ல் கிணற்றடியை சுற்றி சுற்றி வ‌ந்த‌து. அம்மா மஞ்சள் தடவிய துணியை இறக்கையில் சுற்றி,சில நாட்கள் வைத்தியம் பார்த்தாள். அந்த கொக்கின் நிறம் பார்ப்பதற்கு வெண்சங்கை விடவும் வெண்மையாக‌ இருந்தது. இறக்கையில் இருந்த புண் ஆறிய பிறகு கொக்கை பறக்கவிட அம்மா அனுமதித்தாள். இப்போது அந்த கொக்கு உயிருடன் இருந்தால் அந்த கொக்கின் வயது எவ்வளவு இருக்கும்? கொக்கிற்கு எனது முகமும் , அம்மாவின் முகமும் நினைவில் இருக்குமா? என்று அவ்வப்போது மனம் நினைத்துக்கொள்ளும். இந்த வீட்டில் இருந்த போதுதான் எனது வற்புறுத்தலின் காரணமாக அப்பா புது கருப்பு வெள்ளை தொலைக்காட்சி வாங்கித் தந்தார். தொலைக்காட்சி வந்த அன்று பகல் முழுவதும் புதை‌ய‌லை காக்கும் பூத‌ம் போல தொலைக்காட்சியின் அருகிலேயே காத்துக்கிட‌ந்தேன். ஒருநாள் மக்கள்தொகை கணக்கெடுக்க வந்த முதல் வகுப்பு பாமா டீச்சரும் எங்கள் வீட்டிற்குள் வந்து காப்பி குடித்துவிட்டு சென்றிருந்தார். மறுநாள் முழுவதும் அதைப் பற்றியே சக மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அது எனக்கு பெருமையாகவும் இருந்தது.

அம்மாவின் சொந்த‌ வீடு கன‌வு கார‌ணமாக‌ ஊரின் ஒதுக்குப்புறத்தில் ம‌னை வாங்கி வீடுக‌ட்டி குடியேறினோம். வீடு மாற்றும் பொழுது கிணற்றடியில் இருந்த‌ ம‌ண்புழு ஒன்றை தீப்பேட்டியில் அடைத்து புதுவீட்டின் தோட்ட‌த்தில் விட்டேன். இருந்தும் என்னுள் அந்த‌ ப‌ழைய‌ வீட்டின் நினைவு மங்காத‌ ஓளியாக‌வே ஓளி வீசிக்கொண்டிருக்கிறது. அந்த‌ வ‌ய‌தில் தோன்றிய‌ எண்ணமெல்லாம் எனக்கு இர‌ண்டு வீடுக‌ள் உள்ளன என்ப‌தே. தேவைப்ப‌டும் பொழுதெல்லாம் ப‌ழைய‌ வீட்டிற்க்கு வ‌ந்து செல்ல‌லாம் என்றே ந‌ம்பினேன்.

பழைய‌ வீட்டின் நினைவு மனதில் எழும்பொழுதெல்லாம் அந்த‌ தெருவின் வ‌ழியே வீட்டை பார்த்த‌ப‌டியே சென்றிருக்கிறேன். க‌ல்லூரி ப‌டிப்பு நிமித்தமாக‌ வெளியூர் சென்று ப‌டித்துக்கொண்டிருந்த‌ கால‌த்தில்,அவ்வ‌ப்பொழுது ஊர் வ‌ரும்பொழுதெல்லாம் அந்த‌ தெருவின் வ‌ழியெ ஒரு முறையேனும் சென்றுவ‌ருவேன். பல ஆண்டுக‌ள் க‌ழிந்த‌ நிலையில்,பழைய வீட்டின் நினைவு வ‌ந்து வீட்டை பார்க்க‌ சென்றபோது,எங்க‌ள் வீடு இடிக்க‌ப்ட்டு,அது இரு‌ந்த‌ இட‌த்தில் இர‌ண்டு மாடி வீடு க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து. அன்று முழுவ‌தும் ம‌ன‌தில் முள் தைத்த‌து போன்ற உணர்வில் த‌னி அறையில் ப‌டுத்திருந்தேன்.ம‌னதின் வ‌லி மெல்ல க‌ண்ணீராக‌ க‌ரைந்து க‌ண்க‌ளை நிர‌ப்பிக்கொண்டிருந்த‌து. இப்பொழுதெல்லாம் அந்த‌ தெருவின் வ‌ழியே செல்வ‌தை த‌விர்த்தே வ‌ருகிறேன்.Saturday, August 22, 2009

காதல் சிறகுகள்

அவள் மனக் கூட்டில்
இனப் பெருக்கம் செய்தேன்
அழகாய் வளர்ந்தன என் இதய கண்மனிகள்
அள்ளி அணைக்கச் சென்றேன்
சிறகு முளைத்து தாவி பறந்தது
உனக்குள் இருந்தது ஏன் பறந்தது என்றேன்
அது உனக்கு பிறந்ததால் என்றாய்
சோகத்தில் நான்.

நன்றி : பிரவீன் ப்ரசாத்

குறிப்பு : அலுவலக நண்பர் பிரவீன் படைப்புகள் அவர் அனுமதி பெற்றே இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதியில் இன்னும் பல அவரின் படைப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்.

அண்ணன்,பூந்தி,பலூன்

தூக்க‌த்திலிருந்து எழுந்திருத்த‌ போதுதான் அம்மாச்சி வீட்டில் இருப்ப‌து நினைவுக்கு வ‌ந்த‌து. வீட்டின் முற்றத்திற்க்கு வ‌ந்தேன். அய்யா காவ‌டியை த‌யார் செய்யும் முய‌ற்ச்சியில் இருந்தார். இன்னும் இர‌ண்டு தின‌ங்க‌ளுக்கு எங்க‌ள் ஊரில் திருவிழா. விழா நிமித்த‌மாக‌ நான்,அம்மா,அண்ணன் முன்தினமே ஊர் வ‌ந்துவிட்டோம். ஊரின் ம‌த்தியில் பேருந்திலிருந்து இறங்கி வ‌ரும்போதே நாட‌க‌ம் ந‌டைபெற இருக்கும் மேடையை தயார்செய்து கொண்டிருப்ப‌தை க‌வ‌ணித்தேன். அய்யா இப்போது ம‌யில்தோகைக‌ளை காவ‌டியின் இருபுறத்திலும் க‌ட்டி,ச‌ர்கரை நிறப்பப்பட்ட‌ செம்புகளைகீழேதொங்க‌விட்டு,ப‌ட்டு துணியை காவ‌டியின் மேற்புறம் ப‌ர‌ப்பி க‌ம்பீர‌மாக‌ த‌யார் செய்து இருந்தார். எங்க‌ள் வீட்டில் இர‌ண்டு காவ‌டிக‌ள் உள்ளன. ஒன்றை இர‌வ‌ல் வா‌ங்க‌ உற்வுக்கார‌ர் வந்திருந்தார். நாளையும்,நாளை ம‌றுதின இர‌வும் நாட‌க‌ம் ந‌டைபெற இருப்பதை அவ‌ர் கூறிக்கொண்டிருந்தார். அப்பொதிருந்தே நாட‌க‌த்தை காணவேண்டும் என்ற ஆவ‌ல் ம‌ன‌தில் முல்லைக் கொடிபோன்று ப‌ட‌ர்ந்து மணம் வீச்க்கொண்டிருந்த‌து.

இன்று ம‌தியான‌ம் பூசை போட‌வேண்டும். பூசை என்ப‌து காவ‌டி க‌ட்டியுள்ள அனைத்து வீடுக‌ளிலும் ந‌ட‌த்தப்ப‌ட‌வேண்டிய‌ ச‌ட‌ங்கு. காவ‌டி முன்பு தேங்காய்,பழம்,பூ வைத்து பூசை செய்து க‌ட‌வுளை வ‌ணங்க வேண்டும். பூசை முடிந்த‌பிறகு வீட்டிலுள்ள அனைவ‌ருக்கும் மற்றும் ஊரில் உள்ள இல்லாத‌வ‌ர்க‌ளுக்கும்,ஏழைக‌ளுக்கும் த‌லைவாழை இலை போட்டு சுவையான‌ உணவு ப‌ரிமாறப்ப‌டும். சில‌ர் வீட்டில் வ‌ந்து சாப்பிட்டுவிட்டு செல்வார்க‌ள்.சில‌ர் சாப்பாட்டை கூடையில் வா‌ங்கிச்செல்வார்க‌ள். அம்மாச்சி இல்லையென்று சொல்லாமல் அனைவ‌ருக்கும் உணவு ப‌ரிம‌றுவாள். இது ஒரு ச‌ம‌ப‌ந்தி போஜ‌னத்திற்கு ச‌மமான நிக‌ழ்வு.வீட்டில் உள்ள அனைத்துப் பெண்க‌ளும் பூசைக்கான வேலைக‌ளில் மும்மு‌ர‌மமாக‌ ஈடுப‌ட்டுக்கொண்டிருந்த‌னர். பூசை முடிந்த‌ இர‌வு ஊர்க்காவ‌டிக‌ள் அனைத்தும் குளக்க‌ரையில் உள்ள பிள்ளையா‌ர் கோவிலுக்கு எடுத்துச்சென்று கிட‌த்த‌ப்ப‌டும். இந்த இடத்தில் இருந்துதான் ஊர்காவடிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் புற்ப்படும். பிள்ளையார் கோவில் அமைந்துள்ள இடம் இரண்டு குளங்களுக்கு மத்தி்யில். குளங்களை சுற்றிலும் உயரமான அரசமரங்களும், ஆலமரங்களும் அமைந்திருந்தன. இரு குளங்களிளும் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ஊர் அமைந்திருப்பது அழகான மலை அடிவாரத்தில். இந்த மலை அனுமன் தூக்கிசென்ற சஞ்சீவி மலையிலிருந்து சிதறிய சிறு துண்டு என்று அம்மா கூறியிருக்கிறாள்.

 அதிகாலையிலேயே வீட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. விட்டில் அனைவரும் எழுந்துவிட்டோம். நான் குளித்து முடித்து,காவடி புறப்பாட்டிற்காக காத்து கொண்டிருந்தேன். அம்மா மற்றும் சித்தி அரைமணி நேரமாக அண்ணனை எழுப்பும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அது திருமாலை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சிக்கு சற்று குறைவானது அல்லது அதிகமானது என்றே கூறளாம். அண்ணன் தூங்குவதில் கும்பகர்ணன். கடைசியில் முயற்ச்சி திருவினையாக்கியது. அண்ணன் என்னைவிட மூண்று வயது பெரியவன். இன்று அவன்தான் பிரதான கதாநாயகன். காரணம் காவடியை தூக்கும் வேண்டுதலை அவன்தான் நிறைவேற்றவேண்டும். அன்று அவனை பார்பதற்க்கு பொறமையாக இருந்தது. காரணம் அனைவரின் பாரட்டுதலும்,பாசமும் அவனுக்கே கிடைத்தது . ஊர்காவடிகள் அனைத்தும் புறப்பட்டு மலைப்பாதையை சுற்றிவந்து மலைக்கோவிலை அடைந்தது. மலையை சுற்றிவரும் பக்த்ர்கள் களைப்புதீர ஊர்மக்கள் இலவச மோர்பந்தல்,தண்ணீர்பந்தல் போன்றவற்றை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று அம்மா கூறி்க்கொண்டிருந்தாள். பெரியவனாக வளர்ந்தபிறகு இலவசமாக கலர் வழங்கவேண்டும் என்று அம்மாவிடம் கூறினேன். அம்மா ஆரத்தழுவி முத்தம் கொடுத்தாள். திருவிழா முடிந்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தோம்.

வரும் வழி நேடுகும் கடையும் கடைதெருவுமாக ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. எனது பார்வை பலூன் கடையின் மீதிருந்தது. தேனீக்கள் போல‌ சிறுவர்கள் கடையை மொய்த்துக்கொண்டிருந்தனர். பலூன் வியாபாரி உடல்மெலிந்து,கண்ணம் ஓட்டி இருந்தான். பலூன் ஊதி,ஊதி ஏற்ப்பட்டதால் இருக்கலாம். பலூன் வாங்கவேண்டும் என்ற ஆசையை அம்மாவிடம் தெரிவித்தேன். அம்மா இரவு நாடகம் பார்க்கப் போகும்போது வாங்கித்தறுவதாக கூறி சாமாதானம் செய்தாள். அம்மாவும் நானும் வீடுவந்து சேர்ந்த சற்று நேரம் கழித்து வந்த அண்ணனை பார்ததும் கோபமும்,அழுகையும் வந்தது. காரணம் அவன் கையில் அழகான சிகப்பு பலூன். விசாரித்தபோது சித்தி வாங்கித்தந்ததாகக் கூறி வெறுப்பேற்றினான். பலூன் இப்போதே வேண்டும் என்று அடம் பிடித்ததால் அய்யா பலூன் வாங்கிக்கொடுத்தார். அது மிகவும் பெரியதாகவும்,வடிவத்தில் சற்று வித்தியாசமாகவும் அண்ணணின் பலூனைவிட அழகாக பச்சை நிறத்தில் இருந்ததில் பெருமை எனக்கு. இரவு உணவு முடிந்ததும் நாடகம் பார்க்க வேண்டுமென்ற ஆசையை சித்தியிடம் தெரிவித்தேன். அவளும் இசைந்தாள். இதற்க்கிடையில் அண்ணணின் பலூன் உடைந்துவிடப்படியால் அவன் கழுகுப்பார்வை என் பலூனின் மீது விழுந்தது. பலூனை உத்திரத்தின் மேல் அய்யா பாதுகாப்பாக கட்டி தொங்கவிட்டிருந்தார். பலூனை பார்த்தபடியே கிழே படுத்திருந்தேன். தூக்கம் கண்களை தழுவிக்கொண்டிருந்தது .மனதில் நாடகம் பார்தே ஆகவேண்டும் என்றஆசை உட‌லெங்கும் பரவிக்கிடந்தது.

 ஈரத்தில் படுத்த்திருப்பது போல் உணர்வு வந்ததால்,கண் விழித்துப்பார்தேன். அண்ணன் படுக்கையில் சீறுநீர் கழித்துவிட்டு அந்த உணர்வே இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போதுதான் தெரிந்தது இரவேல்லாம் உற்ங்கிவிட்டு காலையில் கண்விழித்திருக்கிறேன். உத்திரத்தை அண்ணந்து பார்த்தேன்,பலூன் தன் மூச்சை அனைத்தையும் இரவேல்லாம் வெளியேற்றிவிட்டு சிறுத்து மெலிந்திருந்தது,அது பலூன் வியாபாரியை ஒருமுறை நினைவுபடுத்தியது. கோபமாக வந்தது,காரணம் பலூன் அல்ல,நாடகத்தை பார்காமல் தவறவிட்ட ஏமாற்றமே. சித்தியிடம் எழுப்பாததற்கான காரணம் கேட்டபொது,தான் எழுப்பியதாகவும்,சுயநினைவின்றி நான் உறங்கிவிட்டதாகவும் தெரிவித்தாள். இதைக்கேட்டு என்மீதே எனக்கு கோபம் வந்தது. நாடகம் பார்த்த அனுபபத்தை அண்ணன் என்னிடம் சொல்லி, மேலும் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டான். தொடர்ச்சியாக வந்த ஒலிபெருக்கி விள்ம்பரம் இன்று இரவும் நாடகம் நடைபெற இருப்பதாகவும்,நாடகத்தின் பெயர் "அரிச்சந்திர மாயன காண்டம்" என்றும் அறிவித்துக்கொண்டிறுந்தது. இது எனக்கு சற்று ஆறுதலை அளித்தது.

அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி அண்ணன் நாடகம் நடைபெறும் மேடையை காண்பிப்பதற்க்காக எனனை அழைத்துச்சென்றான். அம்மா என்னிடம் கொடுத்த ஒரு ரூபாய் பற்றிய செய்தியை அவனிடம் மறைத்துவிடேன். தனியாக பூந்தி வாங்கி சாப்பிடவேண்டும் என்ற ஆசையே அதற்க்குக் காரணம். ஆச்சரியமாக இருந்தது எனக்கு,இது நான் முந்தினம் பார்த நாடக மேடையிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. நாடக மேடையின் மேற்ப்பரப்பு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதில் பந்து விளையடும் இரு யானைகளின் உருவமும்,பூச்சொரியும் அழகான மங்கையின் உருவமும் மாறி மாறி வந்து ஆச்சர்யத்தை அளித்தது. மேடையின் உட்புறத்திலிருந்த திரை சேலையில் வண்ணமாளிகையின் படம் வரையப்பட்டிருந்தது. பார்ப்பதர்க்கு அசலான மாளிகையைவிடவும் நேர்த்தியா இருந்தது. நாடக நடிகர்கள் அனைவரும் வந்துவிட்டதாகவும்,அவர்கள் ஊர்த்தலைவர் வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளதாகவும் அண்ணனின் கூட்டாளிகள் கூறிக்கொண்டிருந்தார்கள்.அண்ணன் என்க்கு பூந்தியும்,சீனிச்சேவும் வாங்கிக் கொடுத்தான். பாக்கெட்டை தொட்டுப்பார்தேன்,அம்மா கொடுத்த ரூபாய் பத்திரமாக இருந்தது.அண்ணன் என்க்கு இப்போது ராமனாகக் காட்சி அளித்தான்.

இதோ இப்போது நான்,அம்மா,சித்தி, அனைவரும் நாடகமேடையின் முன் அமர்ந்து இருக்கிறோம்.நாடகம் தொடங்கிவிட்டது.ஆரம்பக் காட்சியில் தோன்றிய கோமாளி சேட்டை செய்து அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருந்தான். திடீர் என்று வந்த புகையில் தோன்றிய நாரத முனிவர்,கம்பீரமான் தோற்றத்தில் இருந்த மன்னன் அரிச்சந்திரன், கொண்ட கொள்கைக்காக நாடிழந்து,மனைவி இழந்து,மகனை இழந்து மாயாணத்தை காத்துக் கொண்டிருந்த காட்சிகள் ஆச்சர்யத்தையும்,அழுகையையும் வரவழைத்தது. விடியற்க்காலை ஆறுமணி வரை நாடகம் தொடர்ந்து நடைபெற்று முடிந்தது.இபோது நான் எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கிறேன்.திருவிழா முடிந்தபடியால் மீண்டும் ஊருக்கு கிளம்பி பேருந்தில் சென்றுகொண்டிருக்கிறோம்.இப்போது எனக்கு அழுகை பீறிட்டுவருகிற‌து,கார‌ண‌ம் ப‌ள்ளி வீட்டுப்பாட‌த்தை முடிக்காம‌ல் விட்ட‌து நினைவுக்கு வ‌ந்த‌து.வாத்தியார் குச்சியுட‌ன் தோன்றி என்னை மிர‌ட்டிக்கொண்டிருந்தார்.

Monday, August 17, 2009

மோதி விளையாடு - Part 1

மிகவும் பிடித்த விசயங்களில் மழையும் ஒன்று. நான் மழையின் ரசிகன்,மழை பெய்ய தொடங்கி விட்டால் உற்சாகமாகி விடுவேன். மழை அல்லாத காலங்களில் அதற்காக ஏங்கி தவித்திருப்பேன். மழைக்கு பிறகு யாருமற்ற சாலையில் சைக்கிள் சவாரி செய்யும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைப்பதில்லை. பலத்த மழைக்கு பிறகு ஊரை கவ்விகொள்ளும் இருட்டை பார்க்கும் பொழுதில் ஏற்படும் கழிப்பிற்கு அளவே இல்லை.
இப்போதெல்லாம் வார‌ இறுதி நெருங்கிவிட்டால், மழை பெய்யக்கூடாதென்று வேண்டிக்கொள்கிறேன், காரணம் கிரிகெட்.


ஒரு சில வாரங்களாக நான் அலுவலக நண்பர்களுடன் அணிசேர்ந்து வாரவிடுமுறைகளில் வலைப்பயிற்சி மேற்கொள்கிறோம்.
ச‌னிகிழமை அதிகாலை எழுந்து பார்த்த‌போது அதிர்ச்சி என‌க்கு, இர‌வெல்லாம் ந‌ல்ல‌ ம‌ழை பெய்துவிட்டு, இப்போது நிதான‌மாக‌ தூற‌ல் போட்டுகொண்டிருந்த‌து. நினைத்தது போல‌வே வ‌லைப்பயிற்சி ரத்தான செய்தியை நண்பர் சுரேஷின் தொலைபேசி அழைப்பு தெரிவித்த‌து. ஞாயிற்று கிழ‌மையில் போட்டியை வைத்து கொண்டு வலைப்பயிற்சி ர‌த்தான‌து வேத‌னை அளித்த‌து.
ஞாயிற்று கிழ‌மை நண்ப‌க‌ல் ஒரு ம‌ணிக்கு போட்டி ஆர‌ம்பிக்க்க‌ப‌ட‌ வேண்டும். இந்த‌போட்டி நாங்க‌ள் அடைந்த‌ இர‌ண்டு தொட‌ர் தோல்விக‌ளுக்கு அடுத்து ந‌டைபெறும் போட்டி என்ப‌தால் வெற்றிபெற்றாக வேண்டிய‌ க‌ட்டாய‌ம். போட்டி ந‌டைபெறும் இட‌ம் சென்னை துரைபாக்க‌ம் டி.பி. ஜேயின் க‌ல்லூரி.


நான் ம‌ற்றும் அணி ந‌ண்ப‌ர்க‌ள் அரைம‌ணி நேர‌ம் முன்பாக‌வே மைதான‌த்தை அடைந்திருந்தோம். என‌து க‌ல்லூரி ந‌ண்ப‌ர்க‌ளையும் போட்டியை காண‌ அழைத்திருந்தேன். போட்டி குறித்த நேர‌த்தில் ஆர‌ம்ப‌மான‌து. டாசில் வெற்றிபெற்ற எதிர‌ணி த‌லைவ‌ர் பேட்டிங் தேர்வு செய்தார்.இது எங்களுக்கு ப‌ல‌த்த அதிர்ச்சியை த‌ந்த‌து. கார‌ண‌ம் வேறுஎதுவும் இல்லை, விளையாட தேவையான ப‌தினொறு உறுபின‌ர்க‌ளிள் ஒருவ‌ர் ம‌ட்டும் வ‌ரவில்லை. சந்தோஷ், இவர் எங‌க‌ள் அணியின் பிர‌தாண வேக‌பந்து வீச்சாளர். இவ‌ர்தான் போட்டியின் முத‌ல் ஓவ‌ரை வீச‌வேண்டும். அழைபேசியில் தொட‌ர்புகொண்ட‌போது,இப்பொதுதான் சைதாப்பேட்டைதாண்டி வ‌ந்துகொண்டிருப்ப‌தாக‌ கூறினார். வேறு வழியின்றி ப‌த்துபேருட‌ன் போட்டி ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இப்போது மீண்டும் அதிர்ச்சி கார‌ண‌ம், அணித‌லைவ‌ர் ராஜ‌ன் புதுப‌ந்தை என்னிட‌ம் கொடுத்து முத‌ல் ஓவ‌ரை வீச‌ அழைத்தார். ப‌ந்து குழந்தையின் கண்ண‌ம்ப்போல் ப‌ள‌ப‌ள‌பாக‌ இருந்த‌து. ஒருவ‌ழியாக முதல் ஷ்பெல்லை நன்றாக‌வே வீசி முடித்தேன். இது ஒரு முப்ப‌து ஓவ‌ர் கொண்ட போட்டி. இருப‌த்தி ஆறாவ‌து ஓவ‌ரை நான் விசிய‌ போது, எதிர‌ணி ந‌ண்ப‌ர் தொட‌ர்ந்து மூன்று இமால‌ய சிக்ச‌ர்க‌ளை விளாசினார். முடிவில் இருநூற்று முப்பத்தி மூன்று ஓட்ட‌ங்கள் இல‌க்காக‌ நிர்ணயிக்க‌ப‌ட்ட‌து.

நான் ஒன்றும் சிற‌ந்த ஆட்ட‌கார‌ன் இல்லையென்று தெரிந்திருந்தும்,அணித‌லைவ‌ர் ராஜ‌ன் ஒன்ட‌வுன் செல்லும்ப‌டி த‌ண்ட‌னை கொடுத்தார், காரணம் அந்த இருப‌த்தி ஆறாவ‌து ஓவர். இந்த திடீர் அறிவிப்பால் மனது படபடத்தது. படபடப்பை தணிக்க நண்பர் சாகுலை சிகரெட் பிடிக்க அழைத்தேன். அதற்குள் துவக்க ஆட்டகாரர் விஜயன் ஆட்டம் தொடங்கி இரண்டாவது பந்தில் கிளின் போல்டு. பதட்டத்தை தணிக்காமலேயே களமிறங்க தயாரானேன். பெவிலியனிலிருந்து பிட்சை அடையும்வரை எனகிருந்த படபடப்பை வார்த்தைகளால் கூற முடியாது. தேர்வுமுடிவை அறிவிப்புபலகையில் தேடும்போது மாணவனுக்கு வரும் படபடபுக்கு சமமானது அது. சந்தித்த முதல் பந்தை நான்காக மாற்றினேன். அது அருமையான கவர்டிரைவ் என்றே பார்த்த அனைவருக்கும் தோன்றியிருக்கவேண்டும். ஆனால் உண்மை அதுவல்ல, இருட்டில் யாருமற்ற வேளையில் மயானத்தை கடக்கும்போது நமக்குநாமே சத்தமாக பேசிகொண்டோ அல்லது பாடிகொண்டோ செல்வோம் அல்லவா, அதேபோல் கண்ணை இருக்க மூடிகொண்டு வந்ததுவரட்டும் என்று அடித்த ஷாட். அடுத்தடுத்த பந்துகள் வில்லிலிருந்து புறபட்ட அம்பாக கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. வயிற்றில் இப்பொழுது புளியை கறைக்கிறது. ஓவர் வீசிகொண்டிருப்பவர் ஆறடிக்கு மேல் இருகும் ஆஜானுபாகுவான‌ நண்பர். அவர் டெலிவரி அனைத்தும் பெர்ஃபெக்டாகவும் பவுன்சர்களாகவும் வந்தது. அதை நண்பர் பிரவீன் அருமையாக தடுத்தும், அடிதும் ஆடிகொண்டிருந்தார்.

இப்போது எனது ஆட்டம் வந்தது. சந்தித்த முதல் பந்தை மேலே கூறியது போல் விளாசினேன். மைதானத்தில் புழுதி மட்டுமே பறந்தது. பந்து பேல்சை முத்தமிட்டு கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. கிளின் போல்டு. பெவிலியன் திரும்பும்போது அணியினர் முகத்தில் முழிக்க தைரியம் இல்லை. மறைவான இடம் சென்று புகைகாமல் விட்ட சிகரெட்டை இப்போது புகைத்தேன். சிகரெட் ருசிக்கவில்லை. எங்கள் அணி எதிரணி பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் சீட்டுகட்டு சரிவதுபோல் சரிந்து நூற்றி முப்பது ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தோம்.இந்த தோல்வி எங்களுக்கு மூன்றாவது தோல்வி. தோல்வி வெற்றியின் முதல்படி என்பார்கள். இப்போது எங்களிடம் மூன்று படிகட்டுகள் உள்ளன. வெற்றிக்கனி எத்தனை படிகட்டுகளுக்கு அப்பால் உள்ளதென்று தெரியவில்லை. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அடுத்த போட்டிக்காக.

ஆட்டம் முடிந்து நானும் நண்பர் கார்த்திக்கும் வீடு செல்லும் வழியில் இப்படி நினைத்துகொண்டேன் : அழைத்த நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர் போட்டியை காண நண்பன் மழையை தவிர அவன் மட்டும் வந்திருந்தால் அந்த மறக்கபடவேண்டிய இருபத்தி ஆறாவது ஓவரை நான் வீசியிருக்கமாட்டேன்.இதோ இன்று திங்கட்கிழ‌மை காலை என் ந‌ண்ப‌ன் ம‌ழை வ‌ந்துவிட்டான். சாலைக‌ளில் உள்ள‌ க‌ழிவுக‌ளையும், குப்பைகளை மட்டும் சுத்தம் செயயவில்லை மழை, சில நேரங்களில் ம‌னித‌ மன‌தில் உள்ள போட்டி, பொறாமை, கோப‌ம் ம‌ற்றும் வேத‌னை போன்ற‌வ‌ற்றையும்தான். ம‌ழைக்கு நான் ர‌சிக‌ன்.

முடிவு

எல்லா பயணமும்
தொடங்கி ‍ முடியும்
என் பயணம்
அவள் முடிவில் தொடங்கியது
காதல் சம்மதம்

இதழ் முத்தம்

வண்டுகளின் நீதிமன்றத்தில்
நான் - முதல் குற்றவாளி
பூ-வில் தேனெடுக்கலாம்

நான் பூத்த இடத்தில்
எடுத்தேனாம்
அவள்-சிரித்ததாள்
'பூன்னகை பூ' பூக்கும்

Friday, August 14, 2009

சுதந்திரப் பயிர்

தண்ணீர்விட் டோவளர்தோம் ? சர்வேசா !
இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்

- பாரதியார்


எந்தயும் தாயும்மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இன்னடெ - இதை
வந்தனை கூறிமனதில் இருத்திஎன்
வாயுற வாழ்தேனோ - இதை
' வந்தே மாதரம்,வந்தே மாதரம் '
என்று வணங்கேனோ?

- பாரதியார்