Monday, August 17, 2009

மோதி விளையாடு - Part 1

மிகவும் பிடித்த விசயங்களில் மழையும் ஒன்று. நான் மழையின் ரசிகன்,மழை பெய்ய தொடங்கி விட்டால் உற்சாகமாகி விடுவேன். மழை அல்லாத காலங்களில் அதற்காக ஏங்கி தவித்திருப்பேன். மழைக்கு பிறகு யாருமற்ற சாலையில் சைக்கிள் சவாரி செய்யும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைப்பதில்லை. பலத்த மழைக்கு பிறகு ஊரை கவ்விகொள்ளும் இருட்டை பார்க்கும் பொழுதில் ஏற்படும் கழிப்பிற்கு அளவே இல்லை.
இப்போதெல்லாம் வார‌ இறுதி நெருங்கிவிட்டால், மழை பெய்யக்கூடாதென்று வேண்டிக்கொள்கிறேன், காரணம் கிரிகெட்.


ஒரு சில வாரங்களாக நான் அலுவலக நண்பர்களுடன் அணிசேர்ந்து வாரவிடுமுறைகளில் வலைப்பயிற்சி மேற்கொள்கிறோம்.
ச‌னிகிழமை அதிகாலை எழுந்து பார்த்த‌போது அதிர்ச்சி என‌க்கு, இர‌வெல்லாம் ந‌ல்ல‌ ம‌ழை பெய்துவிட்டு, இப்போது நிதான‌மாக‌ தூற‌ல் போட்டுகொண்டிருந்த‌து. நினைத்தது போல‌வே வ‌லைப்பயிற்சி ரத்தான செய்தியை நண்பர் சுரேஷின் தொலைபேசி அழைப்பு தெரிவித்த‌து. ஞாயிற்று கிழ‌மையில் போட்டியை வைத்து கொண்டு வலைப்பயிற்சி ர‌த்தான‌து வேத‌னை அளித்த‌து.
ஞாயிற்று கிழ‌மை நண்ப‌க‌ல் ஒரு ம‌ணிக்கு போட்டி ஆர‌ம்பிக்க்க‌ப‌ட‌ வேண்டும். இந்த‌போட்டி நாங்க‌ள் அடைந்த‌ இர‌ண்டு தொட‌ர் தோல்விக‌ளுக்கு அடுத்து ந‌டைபெறும் போட்டி என்ப‌தால் வெற்றிபெற்றாக வேண்டிய‌ க‌ட்டாய‌ம். போட்டி ந‌டைபெறும் இட‌ம் சென்னை துரைபாக்க‌ம் டி.பி. ஜேயின் க‌ல்லூரி.


நான் ம‌ற்றும் அணி ந‌ண்ப‌ர்க‌ள் அரைம‌ணி நேர‌ம் முன்பாக‌வே மைதான‌த்தை அடைந்திருந்தோம். என‌து க‌ல்லூரி ந‌ண்ப‌ர்க‌ளையும் போட்டியை காண‌ அழைத்திருந்தேன். போட்டி குறித்த நேர‌த்தில் ஆர‌ம்ப‌மான‌து. டாசில் வெற்றிபெற்ற எதிர‌ணி த‌லைவ‌ர் பேட்டிங் தேர்வு செய்தார்.இது எங்களுக்கு ப‌ல‌த்த அதிர்ச்சியை த‌ந்த‌து. கார‌ண‌ம் வேறுஎதுவும் இல்லை, விளையாட தேவையான ப‌தினொறு உறுபின‌ர்க‌ளிள் ஒருவ‌ர் ம‌ட்டும் வ‌ரவில்லை. சந்தோஷ், இவர் எங‌க‌ள் அணியின் பிர‌தாண வேக‌பந்து வீச்சாளர். இவ‌ர்தான் போட்டியின் முத‌ல் ஓவ‌ரை வீச‌வேண்டும். அழைபேசியில் தொட‌ர்புகொண்ட‌போது,இப்பொதுதான் சைதாப்பேட்டைதாண்டி வ‌ந்துகொண்டிருப்ப‌தாக‌ கூறினார். வேறு வழியின்றி ப‌த்துபேருட‌ன் போட்டி ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இப்போது மீண்டும் அதிர்ச்சி கார‌ண‌ம், அணித‌லைவ‌ர் ராஜ‌ன் புதுப‌ந்தை என்னிட‌ம் கொடுத்து முத‌ல் ஓவ‌ரை வீச‌ அழைத்தார். ப‌ந்து குழந்தையின் கண்ண‌ம்ப்போல் ப‌ள‌ப‌ள‌பாக‌ இருந்த‌து. ஒருவ‌ழியாக முதல் ஷ்பெல்லை நன்றாக‌வே வீசி முடித்தேன். இது ஒரு முப்ப‌து ஓவ‌ர் கொண்ட போட்டி. இருப‌த்தி ஆறாவ‌து ஓவ‌ரை நான் விசிய‌ போது, எதிர‌ணி ந‌ண்ப‌ர் தொட‌ர்ந்து மூன்று இமால‌ய சிக்ச‌ர்க‌ளை விளாசினார். முடிவில் இருநூற்று முப்பத்தி மூன்று ஓட்ட‌ங்கள் இல‌க்காக‌ நிர்ணயிக்க‌ப‌ட்ட‌து.

நான் ஒன்றும் சிற‌ந்த ஆட்ட‌கார‌ன் இல்லையென்று தெரிந்திருந்தும்,அணித‌லைவ‌ர் ராஜ‌ன் ஒன்ட‌வுன் செல்லும்ப‌டி த‌ண்ட‌னை கொடுத்தார், காரணம் அந்த இருப‌த்தி ஆறாவ‌து ஓவர். இந்த திடீர் அறிவிப்பால் மனது படபடத்தது. படபடப்பை தணிக்க நண்பர் சாகுலை சிகரெட் பிடிக்க அழைத்தேன். அதற்குள் துவக்க ஆட்டகாரர் விஜயன் ஆட்டம் தொடங்கி இரண்டாவது பந்தில் கிளின் போல்டு. பதட்டத்தை தணிக்காமலேயே களமிறங்க தயாரானேன். பெவிலியனிலிருந்து பிட்சை அடையும்வரை எனகிருந்த படபடப்பை வார்த்தைகளால் கூற முடியாது. தேர்வுமுடிவை அறிவிப்புபலகையில் தேடும்போது மாணவனுக்கு வரும் படபடபுக்கு சமமானது அது. சந்தித்த முதல் பந்தை நான்காக மாற்றினேன். அது அருமையான கவர்டிரைவ் என்றே பார்த்த அனைவருக்கும் தோன்றியிருக்கவேண்டும். ஆனால் உண்மை அதுவல்ல, இருட்டில் யாருமற்ற வேளையில் மயானத்தை கடக்கும்போது நமக்குநாமே சத்தமாக பேசிகொண்டோ அல்லது பாடிகொண்டோ செல்வோம் அல்லவா, அதேபோல் கண்ணை இருக்க மூடிகொண்டு வந்ததுவரட்டும் என்று அடித்த ஷாட். அடுத்தடுத்த பந்துகள் வில்லிலிருந்து புறபட்ட அம்பாக கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. வயிற்றில் இப்பொழுது புளியை கறைக்கிறது. ஓவர் வீசிகொண்டிருப்பவர் ஆறடிக்கு மேல் இருகும் ஆஜானுபாகுவான‌ நண்பர். அவர் டெலிவரி அனைத்தும் பெர்ஃபெக்டாகவும் பவுன்சர்களாகவும் வந்தது. அதை நண்பர் பிரவீன் அருமையாக தடுத்தும், அடிதும் ஆடிகொண்டிருந்தார்.

இப்போது எனது ஆட்டம் வந்தது. சந்தித்த முதல் பந்தை மேலே கூறியது போல் விளாசினேன். மைதானத்தில் புழுதி மட்டுமே பறந்தது. பந்து பேல்சை முத்தமிட்டு கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. கிளின் போல்டு. பெவிலியன் திரும்பும்போது அணியினர் முகத்தில் முழிக்க தைரியம் இல்லை. மறைவான இடம் சென்று புகைகாமல் விட்ட சிகரெட்டை இப்போது புகைத்தேன். சிகரெட் ருசிக்கவில்லை. எங்கள் அணி எதிரணி பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் சீட்டுகட்டு சரிவதுபோல் சரிந்து நூற்றி முப்பது ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி அடைந்தோம்.இந்த தோல்வி எங்களுக்கு மூன்றாவது தோல்வி. தோல்வி வெற்றியின் முதல்படி என்பார்கள். இப்போது எங்களிடம் மூன்று படிகட்டுகள் உள்ளன. வெற்றிக்கனி எத்தனை படிகட்டுகளுக்கு அப்பால் உள்ளதென்று தெரியவில்லை. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் அடுத்த போட்டிக்காக.

ஆட்டம் முடிந்து நானும் நண்பர் கார்த்திக்கும் வீடு செல்லும் வழியில் இப்படி நினைத்துகொண்டேன் : அழைத்த நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர் போட்டியை காண நண்பன் மழையை தவிர அவன் மட்டும் வந்திருந்தால் அந்த மறக்கபடவேண்டிய இருபத்தி ஆறாவது ஓவரை நான் வீசியிருக்கமாட்டேன்.இதோ இன்று திங்கட்கிழ‌மை காலை என் ந‌ண்ப‌ன் ம‌ழை வ‌ந்துவிட்டான். சாலைக‌ளில் உள்ள‌ க‌ழிவுக‌ளையும், குப்பைகளை மட்டும் சுத்தம் செயயவில்லை மழை, சில நேரங்களில் ம‌னித‌ மன‌தில் உள்ள போட்டி, பொறாமை, கோப‌ம் ம‌ற்றும் வேத‌னை போன்ற‌வ‌ற்றையும்தான். ம‌ழைக்கு நான் ர‌சிக‌ன்.

9 comments:

Mohan said...

இந்தக் கட்டுரை உண்மையிலேயே ரொம்ப நல்லா வந்திருக்கு.
உனக்கு 'கிரிக்கெட்' மட்டும்தான் சரிய வருவதில்லை போல :)

Maheswaran said...

Another Dimension? Good one... Expect you to give us more :-)

vijayan said...

Dai mapla.......kalakitada.......very interesting.......like crime naval.....naan nalla bat pannalannu romba kavala patten....but now.....en manasula irundha bhaaram unnudaiya varigalal karaikka pattu vittadhu.......romba sandhosham....kobam..poramai..kavalai..bhayam..ivai ellam namakku varumbodhu avatrukku varthaigalal uyir koduthal gana nerathil avai ellam parandhu vidum.....naalaikku practice.....come with bold mind and sprit..defendately we will get victory....NANDRI...VANAKKAM..

bhaghya said...

Palaniyappa oorla namma vilayanda kevalathellam nee 1st solliirukanum da.nammdhan emergency player achae.avandhan right adikiran theriudhula !!!!!nammanala run adikamudiadhuda!!!!!pesama retirement airu.Suna pana madhiri vilundhalum meesaila mannu otadhamadhiriyae maintain panriyada.

Sahul said...

ennudaya comments unakku erkaneve therivitagivittathu so try more, write a lot. expecting a lot from u. yes WE CAN.

palaniyappan said...

சாகுல் அண்ணா : ந‌ன்றிகள் பல.நீங்கதான் என் கிரிக்கெட் குரு.


மோகன்‌ அண்ணா : நீங்க‌தான் என் எழுத்துக்கு குரு.

ம‌கி அண்ணா : நான் உங்க‌ள் புது ப‌ட‌ வெளியிட்ட்ற்காக‌ காத்திருக்கிறேன்.வெற்றிய‌டைய‌ வாழ்த்துக்க‌ள்.

விஜ‌ய‌ன் : ந‌ன்றி ம்ச்சி.மோதி விளையாடுவோம்.

பாக்கி : எனக்கு நாம் எல‌க்ட‌ரானிக் சிட்டியில் விளையாடிய கிரிக்கெட் நினைவிற்க்கு வருகிறது.

பின்னோக்கி said...

மழை மற்றும் கிரிக்கெட். இரண்டும் எனக்கு பிடித்த விஷயங்கள். ஒரு கிரிக்கெட் match பார்த்த வேகம், உங்கள் எழுத்தில்.

கா.பழனியப்பன் said...

நன்றி பின்னோக்கி.தங்கள் வலைபகுதியை பார்தேன்.வாழ்த்துக்கல்

rajan said...

செகப்பிக்கு பிறகு ஏதும் எலுதலையா?

சௌனதர் ராஜன்

Post a Comment