அப்பா ஒன்றும் பெரிய தவறு செய்துவிடவில்லை. தன்னோடு கூட பிறந்த பிறப்பிர்க்கு உதவியுள்ளார் அவ்வளவே. அதை அம்மாவிடம் தெரிவித்து விட்டு செய்திருந்தாள் அம்மா சற்று சமாதானம் அடைந்திருப்பாள். அப்பா ஏன் ? இதை தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால் கடன் வாங்கி உதவும் அளவுக்கு அப்பா செல்லவதை தடுத்திருப்பாளோ?. சாமிநாதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.அவனுக்கு இரண்டு பேரின் மீதும் கோபம் வந்தது . சிறுவனாக இருக்கும் போது அவனது தங்கையைப் போலத்தான் இவனும் இருவரின் சண்டையைப் பார்த்து மிரண்டு அழுதுவிடுவான். இப்பொதெல்லாம் அவன் இருவருக்கும் இடையே சமாதானம் செய்யுமளவுக்கு வளர்ந்துவிட்டான். அவர்களுக்கு வாழ்க்கையை வாழத்தெரியவில்லையாம். அதை எப்படியும் அவர்களுக்கு புரியவைத்துவிடவேண்டும் என்று சில நேரங்களில் அதற்க்கான முயற்ச்சிகளில் அவன் இறங்வதும் உண்டு. இப்படி நடக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருப்பதும். சில நாடகளில் மீண்டும் ஏதோ ஒரு புள்ளியில் பேசிக்கொள்வதும் வலக்கம். அது அவனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. மனதிற்க்குள் ஒரு முடிவு கட்டிக்கொண்டான் . கல்யாணத்திற்க்கு பிறகு .தான் ஒரு போதும் இது போன்ற சண்டைகளில் மனைவியோடு ஈடுபடக்கூடாது என்பது அது..அவனுக்கு கல்யாண வயது வந்துவிடவில்லை. இருந்தாலும் அப்படி நினைத்துக்கொண்டான் .தனது வாழ்க்கையப் பற்றிய ஆசை அது. வாழ்க்கயை அப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கனவு கண்டான்.நல்ல வளமான சிந்தனைதான்.
அம்மா பக்காத்திவிட்டு சாரதா அக்காள் மகனைப் பற்றி அப்பாவிடம் குறைபட்டுக்கொண்டிருந்தாள். படித்து முடித்து மூன்று வருடம் ஆகியும் வேலைக்கு செல்ல வில்லையாம். அப்படி எதாவது வேலைகிடைத்தாலும் இரண்டு மாதத்திற்கு மேல் ஒரு இடத்திலும் தங்குவது இல்லையாம். சில இரவுகலில் சாரயம் குடித்துவிட்டு வந்து சண்டையிடுகிறானாம். நேற்றுகூட எதோ சண்டையில் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டானாம். சறியான நேரத்திதில் பார்த்ததாள் கப்பாற்றிவிட்டார்களாம். பாவம் சரதா அக்காள் .கணவனை இழந்தவள். எதொ அவளது தம்பியின் உதவியுடன் கிடைத்த வருமானத்தை வைத்து அவனை படிக்க வைத்தாள். அவனும் நன்றாகத்தான் படித்து முடித்தான் . நல்ல திறமை சாலிதான். எதோ சில காலமாக இப்படி செய்து கொண்டிருக்கிறான். இரண்டு வருடம் முன்பு கூட அவனுடன் படித்த அக்காள் ஒருத்திக்கு காதல் கடிதம் கொடுத்து பிரச்சனையாகி அவளது அப்பா வந்து சத்தம் போட்டுவிட்டு சென்றார். சரதா அக்காள் கூனி குறுகிவிட்டாள். அவளின் நிலை பரிதாபத்திற்க்குரியது. அவளது மகனை நினைத்து எரிச்சல் அடைந்துகொண்டான். தான் ஒரு போதும் இப்படிபட்ட சிரமத்தை வீட்டிற்க்கு கொடுத்துவிடக்கூடது என்று முடிவு கட்டிக்கொண்டான் சாமிநாதன். அவனுக்கு கிடைத்த உயர்ந்த கல்வி அவனை அப்படி சிந்திக்க வைத்தது.
சாமிநாதனின் அப்பா உடல் நலம் சரியில்லாமல் ஒரு நாள் படுத்துக்கொண்டார். மருத்துவ பரிசோதனையின் முடிவு அவருக்கு சக்கரையின் அளவும் கொழுப்பின் அளவும் சராசரிக்கு சற்று அதிகமாகவே இருப்பதாக தெரிவித்தது. அன்று முதல் வீட்டில் இனிப்பு வகைக்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அம்மா பக்குவம் பார்க் ஆரம்பித்தால். அப்பா தினசரி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அம்மாவிற்க்கு கூட சில காலமாக மூட்டுவலி பிரச்சனை தொடங்கி விட்டது. சென்றமாதம்கூட கிட்டப்பார்வை காரணமாக அவள் மூக்கு கண்ணாடி அணிய ஆரம்பித்திருந்தாள். வீட்டில் இப்பொதொல்லாம் நேய்களை பற்றியே பேச்சுக்கள் அதிகமாக இருந்தன. இவைகள் அனைத்தையும் பார்க்கும் பொழுது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவனுக்கு ஒருபோதும் இது பொன்ற பிரச்சனைகள் வ்ரப்போவதில்லை. அவன் தினமும் உடற்பயிற்ச்சி செய்கிறான். நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறான். தன்னைப் போல் தனது வீட்டாறால் ஏன் செயல்பட முடியவில்லை ? என்ற கேள்விகளை தனக்குள் எழுப்பிக்கொண்டான். இளைமை துடிப்பு அவனை அப்படி சிந்திக்க வைத்தது.
அப்பாவின் நண்பர் ஒருவர் எதோ அவசரத் தேவைக்காக கைமாத்து கேட்க வந்திருந்தார். அப்பா தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை இல்லை யேன்றும் கிடைத்தால் சொல்லி அனுப்புவதாகம் கூறி அனுப்பிவிட்டார். ஆனால் சாமிநாதனுக்குத்தான் தெரியும் அப்பா சீட்டு பிடித்த பணத்தை நேற்றுதான் அம்மாவிடம் கொடுத்து பத்திரப்படுத்தினார். ஒரு வேலை அப்பாவிற்க்கு தனக்கும் ஒரு பெண் இருப்பது இப்போது நினைவிற்க்கு வந்துவிட்டதோ ?. எப்படியிருந்தும் தங்கைக்கு நாளைக்கே கல்யாணம் நடந்துவிடப் போவதில்லை.தேவைக்கு கொடுத்தால் அவர் திருப்பி கொடுத்துவிடப் போகிறார். அப்பாவின் நடவடிக்கை அவனுக்கு வேதனை அளித்தது.
சாமிநாதனுக்கு சென்னை சென்று கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்பது ஆசை.ஆனால் அப்பா விடுதிக்கட்டணம் மற்றும் இதர போக்குவரத்து செலவு அனைத்தையும் நினைத்து அவனை உள்ளூர் கல்லூரியிலேயே சேர்ந்து படிக்கவைத்துவிட்டார். ஏமாற்றம் அடைந்துவிட்டான். தனக்கு ஒரு குழந்தை இருக்கும் போது அவனுக்கு தேவையானதை கண்டிப்பாக செய்து கொடுப்பான் சாமிநாதன். ஏமற்றத்தின் வலி அவனுக்கு தெரியும் அல்லவா.
வாடகை வீட்டில் வசிப்பது போன்ற கொடுமையை அவன் வேறு எந்த விசயத்திலும் அனுபவித்ததில்லை. ஒரு நாள் வீட்டு உரிமையாளர் உடனே காலி செய்யுமாறு வற்ப்புறுத்த தொடங்கி விட்டார். அப்பாவிற்க்கு வேறு வழி தெரியவில்லை. வீட்டு சாமன்களை நண்பர் ஒருவரது வீட்டில் வைத்து விட்டு குடும்பத்தை ஒரு வாரம் வெளியூரில் உள்ள தாத்த வீட்டல் தங்கவைத்திருந்தார். அந்த வாரம் முழுவதும் சாமிநாதனும் ,அவன் தங்கையும் பள்ளி செல்லவில்லை. சாமிநாதன் அப்பா ஏன் ? இன்னும் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளவில்லை என்று நினைத்துக்கொண்டான். அப்பாவின் செயல் அவனுக்கு வேதனை அளித்தது. தான் ஒரு போதும் இப்படி இருந்து விடக்கூடாது என்று முடிவு கட்டிக்கொண்டான்.
பெரியப்பா வின் மகன் திருமணம் நிமித்தமாக சாமிநாதன் குடும்பம் கல்யாணத்திற்கு சென்றுறிந்தது. கல்யாண பெண்னை பார்த்ததும் சாமிநாதனுக்கு ஒரே அதிர்ச்சி.அண்ணன் நல்ல அரசாங்க பதவியில் உள்ளவன். அவன் எப்படி இந்த பெண்ணை மணந்துகொள்ள சம்மதித்தான். மணப்பெண் சற்று உயரம் குறைவாக பருத்து பற்க்கள் அனைத்தும் வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும்படி இருந்தாள்.தனக்கு வரப்போகும் மனைவி ஒரு போதும் அப்படி இருந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான் அவன்.
இன்றுடன் சாமிநாதனுக்கு எழுபத்தி நான்கு வயது முடிவடைந்துவிட்டது. அவன் இப்போது இருப்பது அவன் சொந்தவீட்டில்தான். அது அவன் வியாபாரத்தில் நண்பணிடம் பொய் கணக்கு காட்டி சம்பாத்த்தி கட்டியது. நண்பன் நட்டப்பட்டு இப்போது எங்கோ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறான்.சாமிநாதனுக்கு இரண்டு மகன்கள். இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. என்ன ஒருவன் தான் இப்பொது சாமிநாதனுடன் இருக்கிறான். இன்னோருவன் காதல் திருமணம் செய்து கொண்டு கல்க்கத்தாவில் வசிக்கிறான். போக்குவரத்து எதுவும் சமிநாதனுக்கும் அவனுக்கும் கிடையாது .தன்னை எதிர்த்து அவன் காதல் திருமணம் செய்துகொண்டது சாமிநாதனுக்கு பிடிக்கவில்லை. ஒதிக்கி வைத்துவிட்டான். சாமிநாதனின் மனைவி பத்து வருடங்களுக்கு முன்பாகவே இறந்துவிட்டாள். அவள் அப்படடி ஒன்றும் அழகானவள் இல்லை.கழுத்து நீண்டு குச்சி போல் இருப்பாள். அவர்கள் இருவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் குறைவே. இருவருக்குமிடையே ஒத்துவரவில்லை..சின்ன சின்ன விசயங்களில் எல்லாம் சண்டைதான். இன்னும் சொல்லப் போனல் அவர்கள் இருவரும் கடைசி எட்டு வருடங்கள் பேசிக்கொள்ளவே இல்லை. சாமிநாதனுக்கு நாற்ப்பது வயதிலேயே வழுக்கை விழுந்துவிட்டது .பற்க்கள் எல்லாம் சொத்தையாகிவிடடது. தொப்பையை குறைப்பதற்க்காக முன்பு தினமும் ஒடிக்கொண்டிருந்தான். அது எந்த பலனையும் அவனுக்கு தரவில்லை. அவன் படித்து முடித்ததும் அவனுக்கு உடனே வேலையும் கிடைத்துவிடவில்லை.இரண்டு வருடங்கள் ஊர் சுற்றிக்கொண்டுருந்தான். அந்த நேரத்தில் தான் அவனுக்கு குடிப்பழக்கமும் தொற்றிக்கொண்டது. தினம் தினம் அமாவுடன் சண்டைதான்.ஒருநாள் வீட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான். அவனது குடிப்பழக்கம் அவனுக்கு குழந்தை பிறக்கும் வரை அவனுடன் இருந்தது.
அவனது வீடு இரண்டு மாடிவீடு.அவன் இப்போது வசிப்பதோ வீட்டில் மறைவாக இருக்கும் ஒரு சிறிய அறையில்.
தனக்கு இன்று பிறந்தநாள் என்று அவனுக்கு ஞபாகம் இல்லை. அவன் முகத்தில் வெயில் சன்னலின் வழியாக சுளிர் என்று அடிக்கிறது. யாரவது வந்து திரைச் சோலையை சரி செய்துவிட்டால் தேவலை என்று தோன்றிகிறது. எப்போது அவனுக்கு பக்கவாதம் வந்ததோ அப்போதிலிருந்து அனைத்து தேவைகளுக்காகவும் அவன் மற்றவர்களைத்தான் நம்மி இருக்கவேண்டியிருக்கிறது. அவன் குளித்து நான்கு நாட்கள் அகிவிட்டது.உடல் எல்லாம் பிசு பிசுக்கிறது. உடையிலிருந்து முடை நாற்றம் வர ஆரம்பித்துவிட்டது. பூமாக் குட்டிதான் முன்பெல்லாம் அவனை சுத்தம் செய்யும் பணியை செய்துவந்தாள். பூமா என்பது அவனுடைய பேத்தி. சாமிநாதன் அவளை பூமாக் குட்டி என்றுதான் செல்லாமாக அழைப்பான். நான்கு நாட்களாக அவளையும் காணவில்லை. அவன் கண்கள் அவளைத் தேடியது. வாய்விட்டு கூப்பிடலாம் என்றால் வாய் அதற்க்கு ஒத்துலைக்கவில்லை. எப்படியும் பூமாக் குட்டி சாயங்காலம் வந்துவிடுவாள் ! என்ற நப்பிக்கையில் காத்திருக்க தொடங்கினான். ஆனால் அவனுக்கு தெரியாது பூமா காலையில் ' கிழம் சாகம நம்ம உயிர வாங்குது ' என்று சொல்லிவிட்டுச் சென்றது.